ஞானபோதினி

From Tamil Wiki
Revision as of 22:57, 1 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஞானபோதினி 1897-ல் தொடங்கப்பட்டு 1905 வரை வெளிவந்த தமிழ் இதழ். எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை மற்றும் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இருவரும் இதன் ஆசிரியராக இருந்தனர். தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு அறிவியல் செய்திகளுக்கும், வரலாற்றுக் கருத்துக்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. எளிய செந்தமிழ் நடையில் இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

ஞானபோதினி 1897-ல் தொடங்கப்பட்டது. அப்போது சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இதழ்களில் ஒரு மாறுபட்ட இதழாக இதனைக் கொண்டு வர வேண்டும் என்று, இதன் ஆசிரியர்களான எம்.எஸ். பூர்ணலிங்கமும், பரிதிமாற் கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரியும் கருதினர். அதன் படி எளிய செந்தமிழ் நடையில் தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம், வரலாறு, பண்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழை வெளியிட்டனர்.