standardised

ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
(Standardised)
(Moved to Standardised)
Line 17: Line 17:
* [https://kadugu-agasthian.blogspot.com/2010/02/blog-post_4420.html டாக்டர்.ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தி]
* [https://kadugu-agasthian.blogspot.com/2010/02/blog-post_4420.html டாக்டர்.ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தி]


{{ready for review}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:41, 16 February 2022

ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தி

ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 15, 1928) ஜலகண்டபுரம் ராமஸ்வாமி கிருஷ்ணமூர்த்தி ஒரு சித்தா மருத்துவர். சோரியாஸிஸ் நோய்க்கு சித்த மருந்தை உருவாக்கியவர். DR.JRK'S RESEARCH AND PHARMACEUTICALS PRIVATE LIMITED நிறுவனத்தின் தலைவர். 2010-ல் மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தி ஏப்ரல் 15, 1928-ல் சேலம் அருகே ஜலகண்டபுரத்தில் ராமஸ்வாமி-பாக்கியம் இணையருக்கு பிறந்தார். இவருடைய தம்பிதான் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி). சென்னை கீழ்ப்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் (இன்றைய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி) அலோபதி மருத்துவம் சித்த மருத்துவம் என்ற இரண்டும் இணைந்த இன்டக்ரேட்டட் மெடிஸின் படிப்பை முடித்தார்

மருத்துவப்பணி

சித்த வைத்தியத்தில் பட்டம் பெற்று, அரசு மருத்துவராக சென்னை அருகே குன்றத்தூரில் பணியாற்றினார். கிராம மருத்துவராக ஐம்பதாண்டுக்காலம் பணியாற்றினார். சோரியாஸிஸ் நோய்க்கு சித்த மருத்துவ மருந்தை உருவாக்கினார். அதை உற்பத்திசெய்யும் DR.JRK'S RESEARCH AND PHARMACEUTICALS PRIVATE LIMITED நிறுவனத்தின் தலைவரானார்.

விருது

2010-ல் டாக்டர் ஜ.ரா.கிருஷ்ணமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அவருடைய கிராமிய மருத்துவப் பணிக்காக வழங்கப்பட்டது

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.