ஜேம்ஸ் எம்லின்

From Tamil Wiki
Revision as of 12:07, 2 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஜேம்ஸ் எம்லின் (J. Emlyn) (1838-1917) கிறிஸ்தவ மதபோதகர். கன்யாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பள்ளியாடி பகுதிகளில் மதப்பணியும் கல்விப்பணியும் ஆற்றியவர் == பிறப்பு, கல்வி == எம்லின் 7 ஏப்ரல் 1838ல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜேம்ஸ் எம்லின் (J. Emlyn) (1838-1917) கிறிஸ்தவ மதபோதகர். கன்யாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பள்ளியாடி பகுதிகளில் மதப்பணியும் கல்விப்பணியும் ஆற்றியவர்

பிறப்பு, கல்வி

எம்லின் 7 ஏப்ரல் 1838ல் இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் கார்டிகான்ஷயர் (Cardigaanshire) பிறந்தார். வெஸ்டெர்ன் ஹைகேட் (Western College and High Gate) கல்லூரியில் இறையியல் படித்தார். கிராவன் சர்ச்( Craven Church) சில் 9 ஜூன் 1867ல் குரு பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

எம்லின் எமிலி செய்மோர் (Emily Seymeir) ஐ 1867 ல் பிரிஸ்டல் ஹேய்கிராப்ர் பாப்டிஸ்ட் சர்ச்சில் (Bristol Haycraft Baptist Church)ல் மணம்புரிந்துகொண்டார்.

மதப்பணி, கல்விப்பணி

லண்டன் மிஷனரி சொசைட்டி (London Missionary Society -LMS ) மதப்பரப்புநராக 11 செப்டெம்பர் 1867ல் எம்லின் இந்தியாவந்தார். 1t ஜூன் 1868 ல் கர்கோயிலை வந்தடைந்தார். அன்றைய திருவிதாங்கூரின் பாறசாலை மிஷன் மாவட்டத்தின் பொறுப்பை ஏற்று 1892 வரை பணியாற்றினார். அன்று குழித்துறைக்கு மேலே காடாகக் கிடந்த நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம், மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் கல்விநிலையங்களை உருவாக்கினார். அவற்றின் ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் அமைந்தன. அவ்வாறாக உருவாகி வந்த புதிய ஊர் நிலத்தை அன்பளிப்பாக அளித்த மன்னர் நினைவாக மார்த்தாண்டம் என்று பெயர் கொண்டது. மார்த்தாண்டம் சிறுநகரின் உருவாக்கம் எம்லின் வழியாகவே நிகழ்ந்தது.


.