under review

ஜேமிஸ் அடைக்கலம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
m (Spell Check done)
 
Line 1: Line 1:
[[File:ஜேமிஸ் அடைக்கலம்.png|thumb|ஜேமிஸ் அடைக்கலம் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)]]

ஜேமிஸ் அடைக்கலம் (ஏப்ரல் 18, 1932) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். நெடுந்தீவில் நாட்டுக்கூத்துக்களை பழக்கியவர்களில் முக்கியமானவர்.  
ஜேமிஸ் அடைக்கலம் (ஏப்ரல் 18, 1932) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். நெடுந்தீவில் நாட்டுக்கூத்துகளை பழக்கியவர்களில் முக்கியமானவர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை பதினொராம் வட்டாரம், நெடுந்தீவில் ஜேமிஸ் அடைக்கலம் ஏப்ரல் 18, 1932 அன்று பிறந்தார். நெடுந்தீவு மாவலித்துறையில் றோ.க.த.க பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். நெடுந்தீவு பதினொராம் வட்டாரத்தைச் சேர்ந்த அந்தோணி-கெளரியல் குருவாக இருந்தார். உறவினரான கௌரியல் ஜேம்ஸ், பேதுறு மடுத்தீன் ஆகியோரும் ரோமன் கத்தோலிக்க குருமாரும், ஊர்மக்களும் ஜேமிஸ் அடைக்கலம் நாடகம் நடிக்க ஊக்குவித்தனர்.
இலங்கை பதினொராம் வட்டாரம், நெடுந்தீவில் ஜேமிஸ் அடைக்கலம் ஏப்ரல் 18, 1932 அன்று பிறந்தார். நெடுந்தீவு மாவலித்துறையில் றோ.க.த.க பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். நெடுந்தீவு பதினோராம் வட்டாரத்தைச் சேர்ந்த அந்தோணி-கெளரியல் குருவாக இருந்தார். உறவினரான கௌரியல் ஜேம்ஸ், பேதுறு மடுத்தீன் ஆகியோரும் ரோமன் கத்தோலிக்க குருமாரும், ஊர்மக்களும் ஜேமிஸ் அடைக்கலம் நாடகம் நடிக்க ஊக்குவித்தனர்.
== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
பல நாட்டுக்கூத்துக்களில் நடித்ததுடன், கூத்துக்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றினார். அன்னை மரியாள் நாடகத்தில் பெண்பாத்திரம் ஏற்று நடித்தார். கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கிறிஸ்தவ நாடகங்களில் அதிகமாக ஈடுபட்டார். நெடுந்தீவு, பாலை, கண்டிக்குளம் ஆகிய இடங்களில் இவருடைய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. தொடர்ந்து நெடுந்தீவு மாணவர்களுக்கு நாட்டுக்கூத்தைப் பழக்கினார். நெடுந்தீவின் அண்ணாவியார் நண்பர்களான வலத்தீஸ், திருச்செல்வம், பொன்னுத்துரை, சைமன் யேசுதாசன், வே. மாணிக்கம், வ. மதியாபரணம், அமிர்தநாதர் ஆகியோருடனும் இணைந்து நாடகங்கள் அரங்கேற்றினார்.

Line 39: Line 39:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள்]]
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 18:27, 11 July 2023

ஜேமிஸ் அடைக்கலம் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

ஜேமிஸ் அடைக்கலம் (ஏப்ரல் 18, 1932) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். நெடுந்தீவில் நாட்டுக்கூத்துகளை பழக்கியவர்களில் முக்கியமானவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை பதினொராம் வட்டாரம், நெடுந்தீவில் ஜேமிஸ் அடைக்கலம் ஏப்ரல் 18, 1932 அன்று பிறந்தார். நெடுந்தீவு மாவலித்துறையில் றோ.க.த.க பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். நெடுந்தீவு பதினோராம் வட்டாரத்தைச் சேர்ந்த அந்தோணி-கெளரியல் குருவாக இருந்தார். உறவினரான கௌரியல் ஜேம்ஸ், பேதுறு மடுத்தீன் ஆகியோரும் ரோமன் கத்தோலிக்க குருமாரும், ஊர்மக்களும் ஜேமிஸ் அடைக்கலம் நாடகம் நடிக்க ஊக்குவித்தனர்.

கலை வாழ்க்கை

பல நாட்டுக்கூத்துக்களில் நடித்ததுடன், கூத்துக்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றினார். அன்னை மரியாள் நாடகத்தில் பெண்பாத்திரம் ஏற்று நடித்தார். கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கிறிஸ்தவ நாடகங்களில் அதிகமாக ஈடுபட்டார். நெடுந்தீவு, பாலை, கண்டிக்குளம் ஆகிய இடங்களில் இவருடைய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. தொடர்ந்து நெடுந்தீவு மாணவர்களுக்கு நாட்டுக்கூத்தைப் பழக்கினார். நெடுந்தீவின் அண்ணாவியார் நண்பர்களான வலத்தீஸ், திருச்செல்வம், பொன்னுத்துரை, சைமன் யேசுதாசன், வே. மாணிக்கம், வ. மதியாபரணம், அமிர்தநாதர் ஆகியோருடனும் இணைந்து நாடகங்கள் அரங்கேற்றினார்.

மாணவர்கள்
  • தி பாலசிங்கம்
  • ஆ. கரன்
  • வே. விஜயகுமாரன்
  • ம. ராசநாயகம்
  • சை. யேசுதாசன்
  • த. பிரபாரத்தினம்
  • யோ. தேவகுஞ்சரி
  • பா. அன்பரசி இன்னும் பலர்

விருதுகள்

  • 1972-ல் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் செபநாயகம் அவர்களாலும் ரா. சின்னத்தம்பி அவர்களாலும் கெளரவிக்கப்பட்டார்.

நடித்த நாடகங்களும், பாத்திரங்களும்

  • மரியசீலன் - கதாநாயகள், உபாத்தியாயர்
  • அன்னை மரியாள் - ஜெயசீலி
  • சபீனகன்னி - சேடி
  • மத்தேயூ மாகிறேற்றம்மாள் - கதாநாயகன்
  • பொன்னின் செபமாலை - மந்திரவாதி
  • திருஞானதீபன் - கதாநாயகன்

பழக்கிய நாடகங்கள்

  • மரியசீலன்
  • மங்கம்மா சபதம்
  • கோவலன் கண்ணகி
  • பூதத்தம்பி
  • யுவானியார்
  • மாணிக்கவாசகர் வரலாறு
  • மனம்போல் மாங்கல்யம்
  • ஞானசவுந்தரி
  • கண்டியரசன்
  • சவேரியார்

உசாத்துணை

✅Finalised Page