ஜான் லோ

From Tamil Wiki
Revision as of 18:22, 2 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜான் லோ ஜான் லோ (Dr. John Lowe ) லண்டன்மிஷன் மதப்பரப்புநர். கன்யாகுமரி மாவட்டம் நெய்யூர் மெடிக்கல் மிஷன் நடத்திய நெய்யூர் மருத்துவமனையின் மருத்துவராக இருந்தார் == பணிகள் =...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜான் லோ

ஜான் லோ (Dr. John Lowe ) லண்டன்மிஷன் மதப்பரப்புநர். கன்யாகுமரி மாவட்டம் நெய்யூர் மெடிக்கல் மிஷன் நடத்திய நெய்யூர் மருத்துவமனையின் மருத்துவராக இருந்தார்

பணிகள்

டாக்டர் ஜான் லோ நெய்யூர் மெடிக்கல் மிஷன் பணியாளராக 21 நவம்பர் 1861ல் வந்து சேர்ந்தார். மருத்துவபோதகம் என்னும் முறையை கொண்டுவந்த ஜான் லோ உள்ளூர் இளைஞர்களுக்கு அடிப்படை மருத்துவப் பயிற்சி அளித்து அவர்களை செவிலியராகவும் மருத்துவ உதவியாளராகவும் பயன்படுத்திக்கொண்டார். கன்யா குமரி மாவட்டத்தில் தொற்றுநோய்களுக்கு தடுப்பூசி போடும் முறை அவரால் அறிமுகமானது. நெய்யூரை ஒட்டிய சிற்றூர்களில் பல சிறு மருத்துவமனைகள் உருவாக வழிவகுத்தார்.

உசாத்துணை

https://www.smcsimch.ac.in/karkonammc/about_hospital.php