ஜானகி

From Tamil Wiki
Revision as of 17:52, 1 July 2022 by Ramya (talk | contribs) (Created page with "ஜானகி (ஜானகி ஆதிநாகப்பன்) (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி) சுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து விடுதலைக்கு பங்காற்றினார். == வாழ்க்கைக் குறிப்பு == தமிழ் நாட்ட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜானகி (ஜானகி ஆதிநாகப்பன்) (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி) சுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து விடுதலைக்கு பங்காற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ் நாட்டிலிருந்து மலேயா பினாங்கிற்கு தன் ஒன்பது வயதில் வந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், அரசியல்வாதியான ஆதிநாகப்பனை 1949இல் ஜானகி திருமணம் செய்து கொண்டார். ஆதி நாகப்பனின் இறப்புக்குப் பின் ஜானகி அவர் பெயரில் மலேசிய எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்தார்.

செயற்பாட்டாளர்

மலேயாவிலிருந்த இந்தியர்களைச் சந்தித்த சுபாஷ்சந்திரபோஸ் இந்திய விடுதலைக்குப் பங்களியுங்கள் என்று கோரியபோது தன் கம்மல்களை கழற்றித் தந்தவர் ஜானகி ஆதிநாகப்பன். தன் பதினெட்டு வயதில் ஜானகி ஆதிநாகப்பன் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். படை அதிகாரிகளுக்கான தேர்வில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவில் துணைத்தளபதியாக இருந்தார். தனது அனுபங்களைக் குறித்து ஒரு நூலை எழுதினார். பர்மா-இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஜானகி போரிட்டார்.

விருது

  • 1977இல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் மலேசியர் ஜானகி.

உசாத்துணை

  • ஜானகி: தினமணி