under review

ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு

From Tamil Wiki
Revision as of 03:19, 6 May 2024 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ் சூஃபி கவிஞர், சூஃபி ஞானி 'சிவஞான தீபம்' என்ற சூஃபி நூலை எழுதினார். அரபு மொழியில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு காதிரியா தரீக்காவைச் சேர்ந்தவர். ஜமாலியா என்னும் பிரிவில் ஞான மார்க்கத்தை நடத்திச் சென்றார். இவருடைய முரீதுகள் மேலப்பாளையம், கொங்கராயாக் குறிச்சி, கடைய நல்லூர், செய்துங்க நல்லூர் ஆகிய ஊர்களில் இருந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு மற்றும் இவருடைய தந்தை, பாட்டனாரின் பாடல்கள் சேர்ந்து 'சிவஞான தீபம் ' என்ற சூஃபி நூல் வெளிவந்தது. அரபு மொழியில் பாடல்கள் பாடினார்.

நூல்கள் பட்டியல்

  • சிவஞான தீபம்

உசாத்துணை


✅Finalised Page