ச. மெய்யப்பன்

From Tamil Wiki
Revision as of 11:35, 10 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "ச. மெய்யப்பன் தமிழ் அறிஞர், பதிப்பாளர், தமிழ்ப் பேராசிரியர். எண்ணற்ற தமிழ் நூல்களை பதிப்பித்தமையால் பதிப்புச் செம்மல் என அறிஞர்களால் அழைக்கப்படுகிறார். == பிறப்பு, கல்வி == புதுக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ச. மெய்யப்பன் தமிழ் அறிஞர், பதிப்பாளர், தமிழ்ப் பேராசிரியர். எண்ணற்ற தமிழ் நூல்களை பதிப்பித்தமையால் பதிப்புச் செம்மல் என அறிஞர்களால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

புதுக்கோட்டை மாவட்டம், இராமச்சந்திராபுரம், கடியாபட்டியில் குங்கிலியம் சண்முகனாருக்கு மகனாக மெய்யப்பன் பிறந்தார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். சிதம்பரத்தில் தமிழுக்கென்று நாற்பதாயிரம் நூல்களுடன் முதல் தனியார் ஆய்வகம் ஒன்றை அமைத்தார்.

தனிவாழ்க்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் தமிழ் நூல்கள் வெளியிடுவதற்காக மணிவாசகர் பதிப்பகத்தைத் தொடங்கினார். இதன் வழியாகப் பல தமிழ் நூல்களை வெளியிட்டிருக்கிறார். பள்ளி மாணவர்களுக்காக "வெற்றித் துணைவன்" எனும் பெயரில் பாட நூல்களுக்கான கையேடுகளை வெளியிட்டுள்ளார். சிதம்பரத்தில் இவருடைய பெயரிலேயே மெய்யப்பன் பதிப்பகம் நிறுவப்பட்டுள்ளது.

விருது

  • குன்றக்குடி அடிகளார் இவருக்கு “தமிழவேள்” என்ற பட்டத்தை அளித்தார்.
  • தருமபுரம் ஆதீனத் தலைவர் “செந்தமிழ்க் காவலர்” என்ற பட்டத்தை அளித்தார்.
  • இவரின் தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

நூல் பட்டியல்

இதர இணைப்புகள்

உசாத்துணை