second review completed

சையத் முகமது நகிப் அல்-அத்தாஸ்

From Tamil Wiki
Revision as of 10:24, 9 December 2023 by Logamadevi (talk | contribs)
Syed muhammad naquib al-attas.jpg

சையத் முகமது நகிப் அல்-அத்தாஸ் (Syed Muhammad Naquib al-Attas) (பிறப்பு: செப்டம்பர் 5, 1931) ஒரு மலேசிய இஸ்லாமிய தத்துவவாதி, எழுத்தாளர். இஸ்லாமியமயமாக்கல் எனும் கருத்தியல் கட்டமைப்பின் முன்னோடி.

பிறப்பு, கல்வி

சையத் முகமது நகிப் செப்டம்பர் 5, 1931-ல் மேற்கு ஜாவாவில் உள்ள போகூரில் பிறந்தார். மூன்று உடன் பிறந்தவர்களுள் இவர் இரண்டாம் பிள்ளை.

அவர் தனது ஆரம்பக் கல்வியை சுகபூமி, ஜாவாவிலும் ஜொகூர் பாருவிலும் பெற்றார். பின்னர் அவர் இங்கிலாந்தின் சான்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாதமியிலும், சிங்கப்பூர் மலாயா பல்கலைக்கழகத்திலும் பயின்றார். கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகம் (McGill University) மற்றும் இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகத்தில் (University of London) இஸ்லாமிய தத்துவம், இறையியல் மற்றும் மீபொருண்மையில்(Metaphysics) முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்

இஸ்லாமியமயமாக்கல்

இஸ்லாமியமயமாக்கல் (Islamisation of Knowledge) என்பது இஸ்லாமிய போதனைகளை நவீன கல்வித் துறைகளுடன் ஒருங்கிணைக்கும் ஒரு கருத்தியல் கட்டமைப்பு. இந்தக் கருத்தியல் கட்டமைப்பு 1979-ல் மெக்காவில் நடைபெற்ற முஸ்லீம் கல்விக்கான முதல் உலக மாநாட்டில் அறிமுகமானது. இந்த உலக மாநாட்டில் சையத் முகமது நகிப் இஸ்லாமியமயமாக்கல் என்னும் இந்தக் கருத்தியலை அறிமுகப்படுத்தினார். இக்கருத்தியலின் முன்னோடியாகவும் அறியப்படுகிறார்.

சர்வதேச இஸ்லாமிய சிந்தனை, நாகரிக கல்வி நிறுவனம்

1987-ல், சையத் முகமது நகிப் இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிகத்திற்கான சர்வதேச கல்வி நிறுவனத்தை (International Institute of Islamic Thought and Civilization, ISTAC) நிறுவினார். இது உலகத் தரம் வாய்ந்த முதுகலைப் பட்டதாரி நிறுவனமாகும். அங்கு அவர் பத்தாண்டு காலத்தில், தனித்துவம் வாய்ந்த பன்மொழி நூலகத்தை நிறுவினார். இந்த நூலகத்தில் அரிய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உட்பட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் தொகுதிகள் உள்ளன.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிஞராக, அவர் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், தூர கிழக்கு மற்றும் முஸ்லீம் உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விரிவுரைகளை வழங்கியுள்ளார். சையத் முகமது நகிப் இஸ்லாமிய தத்துவம், இறையியல் மற்றும் மனோதத்துவம், வரலாறு, இலக்கியம், கலை, நாகரீகம், மதம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இஸ்லாம் பற்றிய 30 புத்தகங்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் எழுதப்பட்ட அவரது சில படைப்புகள் அரபு, பாரசீகம், துருக்கி, உருது, பஞ்சாபி, பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ரஷ்யன், போஸ்னியன், அல்பேனியன், சீனம், ஜப்பானியம், கொரியன், இந்தி, மலையாளம் மற்றும் இந்தோனேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சூஃபியிசம் & மீபொருண்மை
Nūr ad-Dīn 'Abd ar-Rahmān Jāmī

சையத் முகமது நகிப் இங்கிலாந்திலிருந்த போது, அவர் சூஃபியிசத்தின் மீபொருண்மையில் (Metaphysics), குறிப்பாக ஜாமியின் படைப்புகளில் ஆர்வம் காட்டினார். சூஃபியிசத்தின்மேல் ஆர்வமிருந்தமையால் ஸ்பெயின் மற்றும் வட ஆப்பிரிக்காவிற்குச் சென்றார். இதனால், இஸ்லாமிய மரபு அவர் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கிங்ஸ் கமிஷனிலிருந்து ராஜினாமா செய்து மலேயா சென்றார். ராயல் மலாய் படைப்பிரிவில் பணியாற்றினார். சிங்கப்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் (1957-1959) படிப்பைத் தொடர்ந்தார். சையத் முகமது நகிப் ஃபன்சுரி (Fanzuri) மற்றும் அல்-ரானிரியின் (al-Raniri) சிந்தனைகளை பற்றி உரை எழுதியுள்ளார். முகமது நகிபின் இவ்வுரை மலாய் சூஃபிகளின் 17-ஆம் மற்றும் 18-ஆம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டது.

நவீன மலாய் மொழி

சையத் முகமது நகிப் நவீன மலாய் மொழியின் வரலாறு மற்றும் தோற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றினார். பழமையான மலாய் கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடித்து வெளியிட்டார். மலாய்-இஸ்லாமிய சுழற்சி நாள்காட்டியின் அமைப்பைச் சரியாக்கினார். திரங்கானு கல்வெட்டின் சரியான தேதியைக் கண்டுபிடித்து நிறுவினார். மலாய் மொழி ஆய்வுகளும் இஸ்லாமிய ஆய்வுகளும் அவரின் முக்கிய பங்களிப்பு. மலாய்-இந்தோனேசியா தீவுக்கூட்டத்தில் இஸ்லாமியமயமாக்கல் பற்றிய பொதுவான கோட்பாட்டை உருவாக்குவதில் அவர் செய்த பங்களிப்பு காரணமாக மலாய் வரலாற்றாசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்டார்.

1968 -ல் மலேசிய அரசியல் தலைவர்களுடனான விவாதங்களின் போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மலாய் மொழியின் பங்கு என்னும் கருத்தலை உருவாக்கும் பொறுப்பேற்றார். இது மலேசியாவின் தேசிய மொழியாக மலாய் மொழி அமைய ஒரு காரணியாக அமைந்தது.

பதவிகள்

  • பேச்சாளர், இஸ்லாமிய கல்விக்கான முதல் உலக மாநாடு,  மெக்கா, 1977
  • தலைவர், இஸ்லாமியக் கல்வியின் நோக்கங்கள் மற்றும் வரையறை குழு (Committee on Aims and Definitions of Islamic Education), 1977
  • பேராசிரியர், Temple University, Philadelphia, United States 1976-1977
  • தலைவர், இஸ்லாமிய வரலாறு குறித்த யுனெஸ்கோ நிபுணர்களின் கூட்டம், அலெப்போ, சிரியா, 1978
  • தலைவர், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) மலாய் மொழி மற்றும் இலக்கியம், 1970–1984
  • தலைவர், துன் அப்துல் ரசாக் நாற்காலி, ஓஹியோ பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள், (1980-82)
  • நிறுவனர்-இயக்குனர், மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிகத்திற்கான சர்வதேச நிறுவனத்தின் International Institute of Islamic Thought and Civilisation (ISTAC), 1987 தொடக்கம் – இன்று வரை
  • உரிமையாளர், இஸ்லாமிய சிந்தனையின் அபு ஹமித் அல்-கசாலி (ISTAC) அவரை நியமித்தார், 1993
  • உறுப்பினர், ஜோர்டானின் ராயல் அகாடமி, 1994
  • அல்-ஹிக்மா இஸ்லாமிய மொழிபெயர்ப்புத் தொடரின் ஆலோசனைக் குழு உறுப்பினர், உலகளாவிய கலாச்சார ஆய்வுகள் நிறுவனம், பிங்காம்டன் பல்கலைக்கழகம், SUNY, பிரிகாம் யங் பல்கலைக்கழகம்
  • 1965-ல் மலாயா பல்கலைக்கழகத்தில் (UM) மலாய் ஆய்வுத் துறையில் இலக்கியப் பிரிவின் தலைவரானார். 1968 மற்றும் 1970க்கு இடையில் அவர் கலை பரிவின் முதல்வராக பணியாற்றினார். 1970ல் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தின் (UKM) நிறுவனர்களில் ஒருவரானார், அங்கு அவர் மலாய் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சார நிறுவனத்தை (IBKKM) நிறுவி இயக்கினார்.

விருதுகள்

  • இம்பீரியல் ஈரானிய அகாதெமி ஆஃப் பிலாசபியின் உறுப்பினர் (Imperial Iranian Academy of Philosophy) fellow – 1975
  • 1995 இல் கார்ட்டூம் பல்கலைக்கழகம், University of Khartoumஅவருக்குக் கலைக்கான கௌரவ டாக்டர் பட்டம் (டி. லிட்.) வழங்கியது.

நூல்கள்

  • Rangkaian Ruba'iyat, 1959
  • Raniri and the Wujudiyyah of the 17th Century Acheh, 1962
  • Some Aspects of Sufism as Understood and Practised Among the Malays, 1963
  • The Origin of the Malay Sha'ir, 1968
  • Preliminary Statement on a General Theory of the Islamization of the Malay-Indonesian Archipelago, 1969
  • The Mysticism of Hamzah Fansuri, 1970
  • The Correct Date of the Terengganu Inscription, 1970
  • Concluding Postscript to the Origin of the Malay Sha'ir, 1971
  • Islam dalam Sejarah dan Kebudayaan Melayu, 1972
  • Buku Panduan Jabatan Bahasa dan Kesusasteraan Melayu, 1972
  • Comments on the Re-Examination of Al-Raniri's Hujjatu'l-Siddiq: A Refutation, 1975
  • Islam: The Concept of Religion and The Foundation of Ethics and Morality, 1976.
  • Islam Faham Agama dan Asas Akhlak, 1976
  • A General Theory of the Islamization of the Malay-Indonesian Archipelago, 1976
  • The concept of Education in Islam: A Framework for an Islamic Philosophy of Education
  • Islsam, the concept of religion and the foundation of ethics and morality : a lecture delivered on Monday the 5th of April 1976 to the International Islamic Conference, 1976
  • Islam and Secularism, 1978
  • The Positive Aspects of Tasawwuf: Preliminary Thoughts on an Islamic Philosophy of Science, 1981
  • A Commentary on the Hujjat al-Siddiq of Nur al-Din al-Raniri, 1986
  • The Oldest Known Malay Manuscript: A 16th Century Malay Translation of the 'Aqa'id of al-Nasafi, 1988
  • Islam, Secularism, and the Philosophy of the Future, 1989
  • The Nature Of Man And The Psychology Of The Human Soul, 1990
  • On Quiddity and Essence: An Outline of the Basic Structure of Reality in Islamic Metaphysics, 1990
  • Ma'na Kebahagiaan Dan Pengalamannya Dalam Islam, 1993
  • The Degrees of Existence, 1994
  • Prolegomena to the Metaphysics of Islam, 1995
  • Aims and objectives of Islamic education (Islamic education series) Islam dan Filsafat Sains, 1995
  • Risalah Untuk Kaum Muslimin, 2001
  • Tinjauan Ringkas Peri Ilmu dan Pandangan Alam, 2007
  • The ICLIF Leadership Competency Model LCM: An Islamic Alternative, 2007
  • The De-Westernization of Knowledge, 2009
  • Historical Fact And Fiction, 2011
  • On Justice and the Nature of Man: A Commentary on Surah Al-Nisa' (4):58 and Surah Al-Mu'minun (23):12-14, 2015
  • Himpunan Risalah, 2015
  • Islam : The Covenants Fulfilled
  • The Intuition of Existence: A Fundamental Basis of Islamic Metaphysics
  • Haqiqa al-Sa3ada wa Ma3naha fi al-Islam (حقيقة السعادة و معناها في الإسلام) The Meaning and Experience of Happiness in Islam


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.