சேலை சகதேவ முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
(பிழை திருத்தம்)
Line 1: Line 1:
[[File:சேலை சகதேவ முதலியார்.png|thumb|நன்றி- தமிழம்.நெட்]]
[[File:சேலை சகதேவ முதலியார்.png|thumb|நன்றி- தமிழம்.நெட்]]
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜீலை 28, 1953) என்ற இவர் தமிழ் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜீலை 28, 1953) என்ற இவர் தமிழ் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
[[File:மணி.திருநாவுக்கரசு.png|thumb|நன்றி- தமிழம்.நெட்]]
[[File:மணி.திருநாவுக்கரசு.png|thumb|நன்றி- தமிழம்.நெட்]]
[[File:நூல் 4.png|thumb|331x331px]]
[[File:நூல் 4.png|thumb|331x331px]]
இவர் சென்னை திருவள்ளூரை அடுத்த சேலை என்ற ஊரில் 1874 ஆம் ஆண்டு சிங்கார முதலியார் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு அண்ணன் ஒருவரும், தம்பி ஒருவரும் உடன் பிறந்தவர்.  
இவர் சென்னை திருவள்ளூரை அடுத்த சேலை என்ற ஊரில் 1874 ஆம் ஆண்டு சிங்கார முதலியார் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு அண்ணன் ஒருவரும், தம்பி ஒருவரும் உடன் பிறந்தவர்கள்.  

இவர் திருவள்ளூர் வெஸ்லி மிஷன் உயர் நிலைப்பள்ளியில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின் தமிழ் இலக்கண, இலக்கியங்களை தனியாகவும், அறிஞர்களின் உதவியுடனும் கற்று தேர்ந்தார். இவருடைய புலமையை அறிந்து, இவர் படித்த பள்ளியிலேயே இவரை தமிழாசிரியராக அமர்த்திகொண்டனர். இவர் ஓய்வு நேரங்களில் ஈக்காடு என்ற ஊரில் இருந்து வரும் பாதிரியார்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.

Line 15: Line 15:

== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
மணி. திருநாவுக்கரசு என்பவர் பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் பாட நூல்கள் எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார் அப்போது சகதேவ முதலியார் பற்றி அறிந்து அவருடைய துணையை நாடினார். சகதேவ முதலியார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை செம்மை படுத்திக் கொடுத்தார்.  மேலும் இவர் நல்லொழுக்கப்பாடம், வாஸ்கோடகாமா மற்றும் பேசாதவர் பேச்சு ஆகிய நூல்களை எழுதி கொடுத்தார்.
மணி. திருநாவுக்கரசு என்பவர் பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் பாட நூல்கள் எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். அப்போது சகதேவ முதலியார் பற்றி அறிந்து அவருடைய துணையை நாடினார். சகதேவ முதலியார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான ''கழகத் தமிழ்ப்பாட வரிசை''யில் ஆறு நூல்களை செம்மை படுத்திக் கொடுத்தார்.  மேலும் இவர் ''நல்லொழுக்கப்பாடம்'', ''வாஸ்கோடகாமா'' மற்றும் ''பேசாதவர் பேச்சு'' ஆகிய நூல்களை எழுதி கொடுத்தார்.

இவர் எழுதிய மற்ற நூல்கள்
இவர் எழுதிய மற்ற நூல்கள்

Revision as of 19:26, 8 March 2022

நன்றி- தமிழம்.நெட்

சேலை சகதேவ முதலியார் (1874 - ஜீலை 28, 1953) என்ற இவர் தமிழ் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

நன்றி- தமிழம்.நெட்
நூல் 4.png

இவர் சென்னை திருவள்ளூரை அடுத்த சேலை என்ற ஊரில் 1874 ஆம் ஆண்டு சிங்கார முதலியார் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு அண்ணன் ஒருவரும், தம்பி ஒருவரும் உடன் பிறந்தவர்கள்.

இவர் திருவள்ளூர் வெஸ்லி மிஷன் உயர் நிலைப்பள்ளியில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின் தமிழ் இலக்கண, இலக்கியங்களை தனியாகவும், அறிஞர்களின் உதவியுடனும் கற்று தேர்ந்தார். இவருடைய புலமையை அறிந்து, இவர் படித்த பள்ளியிலேயே இவரை தமிழாசிரியராக அமர்த்திகொண்டனர். இவர் ஓய்வு நேரங்களில் ஈக்காடு என்ற ஊரில் இருந்து வரும் பாதிரியார்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.

தனிவாழ்க்கை

இவருக்கு இரு மனைவிகள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஐந்து ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

நூல் 3.png
நூல்கள்1.png

பங்களிப்பு

மணி. திருநாவுக்கரசு என்பவர் பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் பாட நூல்கள் எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். அப்போது சகதேவ முதலியார் பற்றி அறிந்து அவருடைய துணையை நாடினார். சகதேவ முதலியார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை செம்மை படுத்திக் கொடுத்தார். மேலும் இவர் நல்லொழுக்கப்பாடம், வாஸ்கோடகாமா மற்றும் பேசாதவர் பேச்சு ஆகிய நூல்களை எழுதி கொடுத்தார்.

இவர் எழுதிய மற்ற நூல்கள்

  • மார்க்கண்டேயர்
  • நந்தனார்
  • துருவ பிரகலாதர்

இவர் தொகுத்தளித்த நூல்கள்

  • கழகத் தமிழ் கையகராதி
  • தமிழ்ப்பாடத்திரட்டு 1,2
நூல் 2.png

மறைவு

இவர் ஜீலை 28, 1953 ஆம் ஆண்டு முதுமையின் காரணமாக, உடல் நலங்குன்றி தமது 73 வது வயதில் மறைந்தார்.

உசாத்துணை

தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம்