standardised

சேனாதிராய முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References)
No edit summary
Line 54: Line 54:
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)]

* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]

{{Standardised}}
{{ready for review}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:46, 21 April 2022

சேனாதிராய முதலியார்.jpg

சேனாதிராய முதலியார் (1750 - 1840) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், புராண விரிவுரையாளர், தமிழாசிரியர் என பன்முகம் கொண்டவர். மானிப்பாய் தமிழ் அகராதியை முதல்வராக இருந்து தொகுத்து வெளியிட்டது இவரின் முக்கியமான பணியாகும்.

பிறப்பு, கல்வி

இலங்கை யாழ்ப்பாணம் தென்னைக்கோவையில் இருபாலை எனும் ஊரில் 1750-ல் நெல்லைநாத முதலியாருக்கு மகனாக சேனாதிராய முதலியார் பிறந்தார். தமது தந்தையாரிடத்திலும், கூழ்ங்கைத் தம்பிரான், மதகல் சிற்றம்பலப் புலவர் ஆகியோரிடத்திலும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலேயம், போர்த்துகீசிய மொழியில் புலமை உடையவர்.

ஆசிரியர்கள்
  • கூழ்ங்கைத் தம்பிரான்
  • மதகல் சிற்றம்பலப் புலவர்

தனிவாழ்க்கை

சேனாதிராய முதலியார் தென் கோவை பஞ்சாயூதரின் மகளை மணந்தார். இவர்களுக்கு இராமலிங்க முதலியார், பர்வதவத்தினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இராமலிங்க முதலியார் ஆறுமுகநாவலர் நடத்திய முதல் பிரசங்கத்தின் போது அவைத் தலைவராக விளங்கியவர். சேனாதிராய முதலியாரின் மகள்வழிப் பேரனான கந்தப்பிள்ளை சிறந்த தமிழாசிரியர். இவருடைய வழித்தோன்றல்கள் பலர் தமிழ் அறிஞர்களாக இருந்து தொண்டாற்றியவர்கள்.

பணி

  • நீதிமன்ற நியாயவாதி
  • மொழிபெயர்ப்பாளர்
  • மணியக்காரர்

இலக்கிய வாழ்க்கை

ஐரோப்பியர்களுக்கும் பலருக்கும் தமிழ் ஆசிரியராக இருந்தார். நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முதன்முதலில் புராண விரிவுரை செய்யத்தொடங்கினார். இவருக்குப்பின் வந்தவர்களே சரவணமுத்துப் புலவர், ஆறுமுகப் நாவலர், பொன்னம்பலப் பிள்ளை. மானிப்பாயில் வெளியிட்ட தமிழ் அகராதிக்குழுவின் முதல்வர். தமிழ் அகராதியை தொகுத்து வெளியிட்டார். பல வகைச் செய்யுள் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.

மாவிட்டபுரம் சுப்ரமணியக்கடவுள் மீது ஊஞ்சல் பதிகம், நல்லூர் கந்தசுவாமியாரின் மீதான பக்தியால் நல்லை அந்தாதி, நீராவிப் பிள்ளையார் கலிவெண்பா, நல்லை வெண்பா, ஒகுல மலைக் குறவஞ்சி, நல்லைக் குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய நூல்களை இயற்றினார். 1870-ல் இவரது மாணவரான அம்பலவணப் பண்டிதரால் நல்லை வெண்பா அச்சிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழ் மற்றும் சைவ மறுமலர்ச்சிக்கு இவரும் இவருடைய மாணவர்களும் முக்கியமான காரணம்.

மாணவர்கள்
  • நல்லூர் ஆறுமுக நாவலர்
  • நல்லூர் சரவணமுத்துப் புலவர்
  • நீர்வேலிப் பீதாம்பரப் புலவர்
  • அம்பலவாணப் பண்டிதர்
  • வல்வை ஏகாம்பரப் புலவர்
  • நல்லூர் கார்த்திகேய ஐயர்
  • நல்லூர் சம்பந்தப் புலவர்
  • காரைதீவு மு. கார்த்திகேயப் புலவர்

மறைவு

இலங்கை யாழ்ப்பாணம் 1840-ல் தன் எழுபதாவது வயதில் சேனாதிராய முதலியார் காலமானார்.

நூல்கள் பட்டியல்

அந்தாதி
  • நல்லை அந்தாதி
ஊசல்
  • ஊஞ்சற் பாட்டு
  • மாவிட்டபுரம் சுப்ரமணிய ஊஞ்சல் பதிகம்
வெண்பா
  • நல்லை வெண்பா
  • நீராவிப் பிள்ளையார் கலிவெண்பா
குறவஞ்சி
  • ஒகுல மலைக் குறவஞ்சி
  • நல்லைக் குறவஞ்சி

உசாத்துணை

⨮ Standardised

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.