being created

சேக்கிழார்

From Tamil Wiki
Revision as of 00:02, 12 October 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சேக்கிழார்

நாயன்மார்களின் பெருமையைக் கூறும் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார் (அருண்மொழித் தேவர்) இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பல்வேறு சிவாலயத் திருப்பணிகளைச் செய்த இவர், 63 நாயன்மார்களோடு சேர்த்து 64-ம் நாயன்மாராகப் போற்றப்படுகிறார். இவரது காலம் பொதுயுகம் பனிரண்டாம் நூற்றாண்டு.

பிறப்பு, கல்வி

அருண்மொழித்தேவன் என்னும் இயற்பெயரை உடைய சேக்கிழார், பொதுயுகம் பனிரண்டாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டிலுள்ள குன்றத்தூரில் பிறந்தார். ’கிழான்’ என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்த குடியில் பிறந்தவர்களுக்கான சிறப்புப் பெயர். அந்தவகையில் இவர் ‘சேக்கிழார்’ என்று அழைக்கப்பட்டார் என்றும், ‘சேவூர்க்கிழார்’ என்பதே மருவி பின்னர் சேக்கிழார் ஆனது என்ற கருத்தும் உண்டு. சேக்கிழார் முறைப்படி கல்வி பயின்று இலக்கண, இலக்கிய அறிவு மிக்கவரானார். புராண, இதிகாசங்கள், சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

சேக்கிழார் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். நாடெங்கும் பயணம் செய்து பல திருத்தலங்களைத் தரிசித்தார். பல சான்றோர்களின் வரலாற்றைக் கேட்டறிந்தார். ஒரு சமயம் திருநாகேஸ்வரம் சென்றவர், அவ்வாலயத்து இறைவன் மீது மிகுந்த அன்பு பூண்டவரானார். அளவற்ற அன்பின் காரணமாக தான் வசிக்கும் குன்றத்தூரில் ‘திருநாகேஸ்வரம்’ என்ற பெயருடைய ஆலயம் ஒன்றை எழுப்பி, தினந்தோறும் அங்கு சென்று வழிபட்டு வந்தார்.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.