being created

செம்பியன் செல்வன்

From Tamil Wiki
Sembiyan selvan.png

செம்பியன் செல்வன் (இராஜகோபால்) (ஜனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். விவேகி, அமிர்த கங்கை போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

செம்பியன் செல்வன் யாழ்ப்பாணத்திலுள்ள தின்னவேலியில் ஆறுமுகம், தமர்தாம்பிகை இணையருக்கு ஜனவரி 1, 1943 அன்று பிறந்தார். தமையன் கணேசமுத்து. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்துவிடம் வளர்ந்தார். நாகமுத்து அம்மையார் தமிழறிவு பெற்றவர்.

செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம் இந்து தமிழ் ஆரம்ப பாடசாலையில் பள்ளிக்கல்வி கற்றார். யாழ் இந்துக் கல்லூரியில் பயின்றபோது செங்கை ஆழியான், முனியப்பதாசன் போன்றோர் இவரது தோழர்களாக இருந்தனர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியலில் சிறப்புப்பட்டம் பெற்றார்.

செம்பியன் செல்வன் யாழ் இந்துவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எழுதத் தொடங்கினார் அண்ணன் கணேச பிள்ளை 1952-ல் தன் நெருங்கிய நண்பருடன் கையெழுத்து பத்திரிகை நடத்தி வந்தார். அதில் சிறுவர் பகுதியில் செம்பியன் தன்னுடைய ஆக்கங்களை எழுதினார் இதில் 'சிஐடி சிங்காரம்' என்று அவர் எழுதிய சிறிய நாவலும் அடங்கும்

தனி வாழ்க்கை

செம்பியன் செல்வன் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

மணமானவர். மனைவி புவனேஸ்வரி. மகன் இராகுலன்.

இலக்கிய வாழ்க்கை

செம்பியன் செல்வன் நாவல், சிறுகதை, நாடகம், குறுங்கதைகள் எழுதினார். உருவாக்கப்பட்டவர்களில் செம்பியன் முக்கியமானவர்  பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் 9 சிறுகதைகளை தாங்கிய காலத்தின் குரல்கள் என்னும் தொகுப்பு மார்ச் 1962 இல் வெளிவந்தது இதில் புதிய பரம்பரையின் துருவ நட்சத்திரம் என்னும் அவரது சிறுகதை வெளிவந்தது  1962 ஜனவரியில் 12 சிறுகதைகள் அடங்கிய கதை பூங்கா என்னும் தொகுப்பு வெளிவந்தது இதில் பாதி மலர் என்னும் அவரது சிறுகதை பிரசுரமாகியது.

செம்பியன் செல்வனின் 'நெருப்பு மல்லிகை' என்ற நாவல் வீரகேசரியின் 73 ஆவது பிரசுரமாக நவம்பர் 1981 -ல் வெளிவந்தது வீரகேசரி பிரதேச நாவல் போட்டியில்  முதல் பரிசு பெற்றது. 'விடியலை தேடும் வெண்புறாக்கள் 'ஈழமுரசில் தொடராக வெளிவந்தது.  'நிழல்கள்' 1963-ல் சுதந்திரன் இதழில் செங்கையாழியாலும் செம்பியனும் மாறி மாறி எழுதிய தொடர்.  இது யாழ்ப்பாண சமூகத்தின் முதிரா இளைஞர்களின் மனப்போராட்டங்களை சித்தரிக்கிறது.  'நேரங்கள்', 'கர்ப்ப கிரகம்' ஆகிய நாவல்களையும் எழுதினார்.  குறுங்கதைகளும் எழுதினார். 'குறுங்கதை நூறு'  டிசம்பர் 1986-ல் வெளிவந்தது. 

இதழியல்

விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது 'சர்ப்பவியூகம்' சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


விருதுகள், பரிசுகள்

இலக்கிய இடம்

நூல்கள்

  • சர்ப்பவியூகம் - சிறுகதைத்தொகுதி
  • அமைதியின் இறகுகள் (சிறுகதைகள்)
  • குறுங்கதைகள் நூறு (குறுங்கதைகள்)
  • கானகத்தின் கானம் - நாவல்
  • நெருப்பு மல்லிகை (நாவல்)
  • விடியலைத் தேடும் வெண்புறாக்கள் (நாவல்)
  • மூன்று முழு நிலவுகள் (நாடகம்)
  • ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்)
  • நாணலின் கீதை (தத்துவம்)



உசாத்துணை

செம்பியன் செல்வன், நூலகம் வலைத்தளம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.