first review completed

செந்தில் ஜெகந்நாதன்

From Tamil Wiki
Revision as of 05:47, 8 April 2022 by Logamadevi (talk | contribs)
செந்தில் ஜெகந்நாதன்

செந்தில் ஜெகந்நாதன் (செந்தில் ஜெகன்னாதன்) (ஆகஸ்ட் 20, 1987) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையில் பணியாற்றுகிறார்.

பிறப்பு, கல்வி

செந்தில் ஜெகந்நாதன் பிறந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் பனம்பள்ளி கிராமம். ஆகஸ்ட் 20, 1987 அன்று ஜெகந்நாதன் சித்ரா ஆகியோருக்கு பிற்ந்தார்.  

தொடக்கக் கல்வி TELC தொடக்கப்பள்ளி. உளுத்துக்குப்பை. இடைநிலைக் கல்வி தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி மயிலாடுதுறை. மேல்நிலைக்கல்வியை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி. மயிலாடுதுறையில் முடித்தபின் இளங்கலை உயிர்மவேதியியல் SKSS. கலைக் கல்லூரி, திருப்பனந்தாள். சென்னைப் பல்கலைக் கழகம், சென்னையில் தொலைதூரக் கல்வியில் வணிகநிர்வாகவியல் முதுகலை

தனிவாழ்க்கை

மனைவி பெயர் மணிமேகலை. திருமணம் டிசம்பர் 4, 2016 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. மகன் பெயர் மகிழ்நந்தன். 2014-ஆம் ஆண்டு முதல் திரைப்படத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.  

இலக்கியவாழ்க்கை

தொடக்கத்தில் சில திரைப்பட இதழ்களுக்கு திரைப்படக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆகஸ்ட் 1, 2018 அன்று முதல் சிறுகதை ‘அன்பின் நிழல்’ ஆனந்த விகடனில் வெளிவந்தது. “எனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய ஆளுமைகள் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோர்” என செந்தில் ஜெகந்நாதன் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

செந்தில் ஜெகந்நாதன் வேளாண்குடிகளின் வாழ்க்கையையும் அவர்களின் நிலையில் உருவாகி வந்துகொண்டிருக்கும் மாற்றங்களையும் உருவகப்படுத்தி வாழ்க்கையின் அடிப்படையான வினாக்களை எழுப்பிக்கொள்ளும் படைப்பாளி. சினிமாப் பின்னணியிலும் கதைகளை எழுதியிருக்கிறார்.

நூல்கள்

சிறுகதை
  • 'மழைக்கண்' சிறுகதைத் தொகுப்பு

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.