செந்தமிழ் மாலை

From Tamil Wiki
Revision as of 22:02, 4 February 2024 by ASN (talk | contribs) (Created page with "செந்தமிழ் மாலை, தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. எந்த ஒரு பொருளையும் பாடுபொருளாக் கொண்டு, இருபத்தேழு பாடல்களால் இயற்றப்படுவது செந்தமிழ் மாலை. == செந்தமிழ் மாலை விளக்கம் == த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செந்தமிழ் மாலை, தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. எந்த ஒரு பொருளையும் பாடுபொருளாக் கொண்டு, இருபத்தேழு பாடல்களால் இயற்றப்படுவது செந்தமிழ் மாலை.

செந்தமிழ் மாலை விளக்கம்

தமிழ் இலக்கியத்தில் பல்வேறு மாலை நூல்கள் உள்ளன. அவற்றில் மாறுபட்ட இலக்கணத்தைக் கொண்டது செந்தமிழ் மாலை. எந்த ஒன்றையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டு, இருபத்தேழு பாடல்களால் பாடப்படும் இலக்கியம் செந்தமிழ் மாலையாகும்.

செந்தமிழ் மாலை இலக்கணம்

செந்தமிழ் மாலை குறித்து, பன்னிரு பாட்டியல் நூல் மட்டுமே இலக்கணம் கூறியுள்ளது.

எப்பொரு ளேனு மிருபத் தெழுவகை
செப்பிய நெறியது செந்தமிழ் மாலை

எனக் கூறியுள்ளது.

செந்தமிழ் மாலை - சான்று நூல்கள்

சேலம் சுகவனேஸ்வரர் செந்தமிழ் மாலை, கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ்மாலை ஆகியன இந்த இலக்கிய வகை நூல்களுக்குச் சான்றாகும்.

உசாத்துணை