under review

சூசன்னா எமிலியா ஆடிஸ்

From Tamil Wiki
Revision as of 13:34, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

To read the article in English: Susanna Emilia Addis. ‎

சூசன்னா எமிலியா ஆடிஸ்

சூசன்னா எமிலியா ஆடிஸ் (ஆகஸ்ட் 2, 1802 - பிப்ரவரி 27, 1898) கோவையின் முதல் ஆங்கிலப்பள்ளியின் ஆசிரியை. அதன் நிறுவனரான ஆடிஸ் அவர்களின் மனைவி

பிறப்பு

சூசன்னா சென்னையில் ஆகஸ்ட் 2, 1802-ல் தாமரிசியஸ் வான் சமோரன் (Tamericus Carolus van Someren)-னுக்கு பிறந்தார்.

தனிவாழ்க்கை

லண்டன் மிஷன் போதகரான வில்லியம் பான் ஆடிஸ் (William Bawn Addis)-ஐ மணந்தார். இவர்களுக்கு ஹென்றி பான் ஆடிஸ், வில்லியம் ஜட்ஸன் ஆடிஸ் என இரு பிள்ளைகள். வில்லியன் ஜட்ஸன் ஆடிஸ் லண்டன் மிஷன் போதகராக இருந்தார்.

கல்விப்பணி

கோவை மரக்கடையில் கிறித்துவப்பேட்டையில் 1831-ல் லண்டன் மிஷன் சொசைட்டியால் ஆரம்பிக்கப்பட்ட வெர்னாகுலர் பள்ளியை வில்லியம் பான் ஆடிஸ் பாதிரியாரும் அவர் மனைவி சூசன்னா எமிலியா ஆடிஸும் நடத்தினர்.சூசன்னா அங்கே முதல் ஆசிரியை. அதே ஆண்டில், லண்டன் மிஷன் சொசைட்டியால் இன்னொரு தொடக்கப்பள்ளி ராஜவீதியில் துவங்கப்பட்டு, பிறகு அது, 1898-ல் யூனியன் ஹைஸ்கூல் தெருவுக்கு இடம்பெயர்ந்தது. சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியாக மாற்றமடைந்துள்ளது.

மறைவு

பிப்ரவரி 27, 1898-ல் மறைந்தார்

உசாத்துணை


✅Finalised Page