under review

சு. விஸ்வநாதையர்

From Tamil Wiki
Revision as of 15:36, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)

சு. விஸ்வநாதையர் (பொ.யு. 1868) தமிழ்ப்புலவர். முருகன் மீது பாடிய இசைப்பாடல்கள் முக்கியமானவை.

வாழ்க்கைக் குறிப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 1868-ல் சுப்பிரமணிய ஐயருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியும், தமிழ், ஆங்கிலம், வடமொழியையும் கற்றார். திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் முதலிய உரைநடை நூல்களைக் கற்றார். சிவன் மீதும் முருகன் மீதும் பற்றுதல் கொண்டிருந்தார். அரசுத்தொழில் துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

முருகன் மீது இசைப்பாடல், திருப்புகழ்ப்பாக்கள், சந்தப்பாடல்களைப் பாடினார். வரகவி.அ. சுப்பிரமணி பாரதியார், காஞ்சிபுரம் இராமாநந்தயோகி, சிவாநந்தசாக யோகீஸ்வரர் இவரின் பாடல்களை பிழைதிருத்தி அச்சிட்டனர்.

பாடல் நடை

சுடலையி லாடுமிச இமவரை தேவநாத
சுரவர யோகரூப
சுடமணி யாசையோடு மதிகொணா மாறரூப
சுகுமர வீரதீர

நூல் பட்டியல்

  • இராமேஸ்வரம்

உசாத்துணை


✅Finalised Page