சு. சிவபாத சுந்தரம்

From Tamil Wiki
Revision as of 12:20, 12 November 2022 by Ramya (talk | contribs) (Created page with "சு. சிவபாத சுந்தரம் (ஜனவரி 1, 1878 - ஆகஸ்ட் 14,1953) ஈழத்து தமிழ் சைவப் புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == சிவபாத சுந்தரம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலோலியூரில் 1878இல், சுப்பிரமணியபிள்ளை,...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சு. சிவபாத சுந்தரம் (ஜனவரி 1, 1878 - ஆகஸ்ட் 14,1953) ஈழத்து தமிழ் சைவப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவபாத சுந்தரம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலோலியூரில் 1878இல், சுப்பிரமணியபிள்ளை, வள்ளியம்மை இணிஅயருக்கு மகனாக ஜனவரி 1, 1878இல் பிறந்தார். வ. குமாரசுவாமிப் புலவர், வ. கணபதிப் பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரிடம் தமிழும் சமஸ்கிருதமும் கற்றார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலக்கல்வி கலைமாணி (B.A.) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சிவபாத சுந்தரம் 1924 முதல் ஒன்பது ஆண்டுகளாகச் யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதிபராகக் பணியாற்றினர்.

கல்விப்பணி

1939ஆம் ஆண்டிலே இலங்கைக் கல்வி முறையினைத் திருத்தியமைப்பதற்காக நிறுவப்பட்ட ஆணைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுக் கடமையாற்றி வந்தார். அதன்பின் அமைதியான வாழ்க்கையினை விரும்பி, "கந்தவனம்’ என்னும் முருகன் கோயிலுக்கு அண்மையிலே ஒரு திருமடத்தினை நிறுவி அங்கு வாழ்ந்துவந்தார். அங்கே, சித்தாந்த சாத்திரமும் புராணமும் பாடங் கேட்கச் சென்ற மாணவர்களுக்குக் கற்பித்துக்கொண் டிருந்தார். திருக்கேதீச்சரக் கோயிற்றிருப்பணியில் ஊக்கமுடையவராய் உழைத்து, அதற்கென அமைக்கப் பட்ட சபையின் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

சைவப்பணி

கிறித்து சமயத்தவர் சைவ சமயத்தினை இகழ்ந்துரைப் பதையும், சைவர்களை மதம் மாற்றுவதையும் கண்டு மனந்தாங்காது கிறித்து மதத்தைக் கண்டித்துச் சைவ சமயத்தை வளர்த்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மறைவு

நூல் பட்டியல்

  • சைவபோதம்
  • திருவருட்பயன் விளக்கவுரை
  • சைவக்கிரியை விளக்கம்
  • கந்தபுராண விளக்கம்
  • திருவாசக மணிகள்
  • அளவை நூல்
  • அக நூல்
  • படிப் பிக்கும் முறைகளும் விதிகளும்
  • திருப்பெரு வடிவம்
  • Saiva School of Hinduism
  • Essentials of Logic
  • Glories of Saivaism

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • நினைவுமலர்: சிவபாத சுந்தரம்