சுரேஷ் பிரதீப்

From Tamil Wiki
Revision as of 18:19, 19 January 2022 by Suneelkrishnan (talk | contribs) (புதிய பக்கம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுரேஷ் பன்னீர்செல்வம் எனும் இயற்பெயருடைய எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்  திருவாரூர் மாவட்டம் தக்களூரில், பன்னீர்செல்வம், வசந்தா இணையருக்கு  14.01.1992 அன்று இரண்டாவது மகனாக பிறந்தார். சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் என தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது திருவாரூரில் அஞ்சல் துறையில் அலுவலகராக பணியாற்றி வருகிறார்.  

கல்வி

திருவாரூரில் உள்ள கண்கொடுத்தவனிதம் அரசு தொடக்கப்பள்ளியில் 1996 தொடங்கி 2001 வரையிலும் பின்னர் கண்கொடுத்தவனிதம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2001 தொடங்கி 2006 வரையிலும், அதைத்தொடர்ந்து திரூவாரூர்

வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில்  2006 தொடங்கி 2008 வரையிலும் பயின்றார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்  2008 தொடங்கி 2012 வரை படித்து பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

25.01.2021 அன்று

பிரியதர்ஷினியை மணந்தார். பிரியதர்ஷினி வங்கியில் பணிபுரிகிறார்.  

இலக்கிய பங்களிப்பு

ஜெயமோகனையும் தஸ்தாவெய்ஸ்கியையும் ஆதர்சமாக கொண்ட அவருடைய முதல் படைப்பாக 'அலுங்கலின் நடுக்கம்' எனும் சிறுகதை பதாகை மின்னிதழில் 2017 ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டு அவருடைய முதல் நாவலான 'ஒளிர் நிழலும்' சிறுகதை தொகுப்பான 'நாயகிகள் நாயகர்களும்' வெளியாயின.

சிதறுண்ட வடிவத்தில் கதைக்குள் கதை எனும் தன்மையுடன் சொல்லப்பட்ட அவருடைய 'ஒளிர் நிழல்' நாவல் பரவலாக கவனிக்கப்பட்டது‌. 'பாரம்' 'எஞ்சும் சொற்கள்' ஆகிய சிறுகதைகள் அதன் பேசு பொருளும் கூர்மையான கூறுமுறையும் இயைந்து வாசக கவனத்தைப்பெற்றன.

விருதுகள் - வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது 2017

புதுமைப்பித்தன் குறுநாவல் பரிசு 2021- 'பத்து பாத்திரங்கள்'

நூல்பட்டியல்

ஒளிர்நிழல் நாவல் 2017

நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு 2017

தன்வழிச்சேரல் கட்டுரைத் தொகுப்பு 2018

எஞ்சும் சொற்கள் சிறுகதை தொகுப்பு 2019

உடனிருப்பவன் சிறுகதை தொகுப்பு 2020

பொன்னுலகம் சிறுகதை தொகுப்பு 2021

இணைய பக்கம்

sureshezhuthu.blogspot.com