under review

சி. பங்காருப்பத்தர்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(Moved Category Stage markers to bottom and added References)
Line 19: Line 19:


{{ready for review}}
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:10, 17 April 2022

சி. பங்காருப்பத்தர் (பொ.யு. 1871) தமிழ்ப்புலவர். சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர் என பன்முகம் கொண்டவர். விவேக தர்ப்பணம் மொழிபெயர்ப்பு முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் நமண்டியில் பிப்ரவரி 3, 1871இல் சின்னத்தம்பிப்பத்தருக்கும், கங்கையம்மைக்கும் மகனாகப் பிறந்தார். விஸ்வகர்ம குலம். நெற்குணம் எனும் ஊரில் தமிழும், தெலுங்கும் கற்றார். புதுச்சேரியில் குலத்தொழிலைக் கற்றார். புதுச்சேரி, குயப்பாளயம் பு.அ. பெரியசாமிப் பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கைவல்ய வேதாந்த நூலை வளவனூர் மடம் சண்முக அடிகளிடம் கற்றார். புதுவை சாந்தானந்த குருசரஸ்வதி அடிகளிடம் வடமொழி கற்றார். இலக்கண இலக்கியங்களை மாணவர்களுக்கு கற்றுத்தந்தார்.

1902இல் முத்தியாலுப்பேட்டை கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1906இல் கல்வே கல்லூரி ஆசிரியராக இருந்தார். 1922இல் விஸ்வகர்ம அவைஅயி புதுவையில் நிறுவினார்.

இலக்கிய வாழ்க்கை

1895இல் வித்யாபிவிருத்தி அவையில் உறுப்பினரானார். அந்த அவையிலிருந்து வெளிவந்த ‘இலகுவேகம்’ இதழில் எழுதினார். தெலுங்கில் சாந்தானந்த அடிகள் எழுதிய வேதாந்த நூலான விவேக தர்ப்பணத்தை தமிழில் மொழிபெயர்த்தார்.

1912இல் கலைமகள் கலகத்தை ஏற்படுத்தினார். உறுப்பினர்களுடன் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளின் தலைமையின் கீழ் சொற்பொழிவுகள் செய்தார். ”கலைமகள்” இதழை நடத்தி அரிய கட்டுரைகளை வெளியிட்டார். செய்யுள்கள் பல பாடியுள்ளார். கட்டுரைகள் பல எழுதியுள்ளார். தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.

நூல் பட்டியல்

  • விவேக தர்ப்பணம் (மொழிபெயர்ப்பு)
  • தனிப்பாடல்கள்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.