சி.சுப்ரமணிய பாரதியார்

From Tamil Wiki
Revision as of 20:29, 15 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சி.சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) ( ) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர். நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என்று அவரை குறிப்பிடுவது விமர்சகர்களி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி.சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) ( ) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர். நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என்று அவரை குறிப்பிடுவது விமர்சகர்களின் வழக்கம். நவீனக் கவிதை, நவீன உரைநடை இலக்கியம், இதழியல் ஆகியவற்றில் முன்னோடி. தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.