under review

சிவயோக அடிகள்

From Tamil Wiki
Revision as of 18:40, 13 March 2023 by Logamadevi (talk | contribs)

சிவயோக அடிகள் (பொ.யு.19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வடலூருக்கு அருகே கங்கை கொண்டான் குப்பத்தில் சிவயோக அடிகள் 19-ஆம் நூற்றாண்டில் விரூபாக்க ஐயருக்கும் சுப்பம்மையருக்கும் மகனாகப் பிறந்தார். வீரசைவ குலத்தில் பிறந்தார். இயற்பெயர் அப்பாவு. வடமொழி, தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளையும் கற்றார். காலக்கணிதம் கற்றார். விரூபாக்கம்மாளை மணந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அறிவுநூல் ஆராய்ச்சி செய்தார். ஞானவசிட்ட நூலை ஓதினார். முருகனின் மீது தனிப்பாடல்கள் பாடினார். செய்யுள்கள் பல பாடினார்.

நண்பர்கள்
  • ராமலிங்க அடிகள்
  • பொன்னேரிச் சுந்தரம்பிள்ளை
  • சபாபதிப்பிள்ளை

பாராட்டு

  • சென்னை மாநில அமைச்சர் திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் இவரின் செய்யுளைப் பாராட்டினார்.
  • சோலையபுரி வைணவத்தாசில்தார் இவரின் செய்யுள்களைப் பாராட்டினார்.

பாடல் நடை

வட்டிகள் வாங்குஞ் செட்டி
வழிதனிற் பிழைகள் சொன்னான்
சட்டிதான் கொடுப்பான் தேவி
சண்டாளம் குடும்ப மெல்லாம்
ஒட்டிடும் ஒருவா ரத்தில்
ஒழியுமே பணங்க ளெல்லாம்
எட்டிபோல் ஒத்த னுக்கு
இயம்பினாள் தேவி தானே

மறைவு

சிவயோக அடிகள் டிசம்பர் 28, 1885-ல் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page