under review

சிவசுப்பிரமணிய ஐயர்

From Tamil Wiki
Revision as of 18:39, 13 March 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சித்திரவேலர் ஊஞ்சற்பதிகம்

சிவசுப்பிரமணிய ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவசுப்பிரமணிய ஐயர் இலங்கை கந்தரோடையில் கந்தர் கோவிலென வழங்கப்படும் விநாயகர் ஆலயத்திற்கு பரம்பரை அர்ச்சகர் உரிமை பூண்டவரும், கெளணியர் குலத்தைச் சேர்ந்தவருமான விசுவநாத ஐயருக்கு மகனாகப் பிறந்தார். முருகேச பண்டிதரிடம் இலக்கண இலக்கியங்கள் கற்றார்.

தனிவாழ்க்கை

வடகோவைச் சித்திர வேலாயுத சுவாமி கோவில் பிரதிஷ்டாபகர் வேதக்குட்டி குருக்களின் மகள் லட்சுமியம்மாவை திருமணம் செய்து கொண்டார். மகன் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர் கோவில் பிரதமகுரு ரத்தினசாமி குருக்கள், மகள் மீனாட்சியம்மாள். கோப்பாயில் ஆசிரியப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சிவசுப்பிரமணிய ஐயர் தென்னிந்தியாவில் தலையாத்திரை செய்து அங்குள்ள அறிஞர்களோடு தொடர்பு கொண்டார். தனிப்பாடல்கள் பல பாடினார். 'சித்திரவேலர் ஊஞ்சற்பதிகம்' எழுதினார்.

மறைவு

சிவசுப்பிரமணிய ஐயர் நோய்வாய்ப்பட்டு நடுவயதில் காலமானார்.

நூல் பட்டியல்

  • சித்திரவேலர் ஊஞ்சற்பதிகம்

உசாத்துணை


✅Finalised Page