சிவசங்கரி

From Tamil Wiki
Revision as of 01:15, 23 January 2022 by Jeyamohan (talk | contribs)
Sivasankari.jpg

சிவசங்கரி (14 அக்டோபர் 1942) தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாக கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். பெண்களின் உரிமைகள் மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றை கருக்களாகக் கொண்டு எழுதியவர். குடி முதலிய சமூகத்தீங்குகளை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கியமுயற்சியான ‘இந்தியாவை இணைத்துக்கட்டு’ தமிழுக்கு இவருடைய கொடை..

பிறப்பு, கல்வி

சிவசங்கரி, அக்டோபர் 14, 1942 அன்று சூர்யநாராயணன், ராஜலெக்ஷ்மி இணையருக்கு நான்காவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயத்தில் உயர்நிலை கல்வி கற்றார். பின் சென்னை, SIET மகளிர் கல்லூரியில் விலங்கியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சிவசங்கரி 1963ல், பொறியாளர் சந்திரசேகரனை மணந்தார். சிவசங்கரி 'சிடி பாங்க்'கில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். பரத நாட்டியம் முறையாக பயின்று அரங்கேற்றம் செய்திருக்கிறார். கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவர்.

இலக்கியவாழ்க்கை

சிவசங்கரியின் முதல் சிறுகதை ’அவர்கள் பேசட்டும்’ ,1968ம் ஆண்டு கல்கி இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளை பேசுவதாக அமைந்தது. 1980 ம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த ஒரு மனிதனின் கதை குடி போதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீளுவதை பற்றியுமானது.

ஆனந்த விகடன் இதழில் 1983 ம் ஆண்டு வெளியான பாலங்கள் தொடர் தமிழ்ப் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையை சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது.

சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன், தன்னுடைய "தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்" பட்டியலில், சமூக மிகு கற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார்.

இந்தியாவை இணைத்துக்கட்டு

சிவசங்கரி இந்தியாவை இணைத்துக்கட்டு (KNIT INDIA THROUGH LITERATURE, in June 2009.) என்னும் திட்டத்தின்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் எழுதும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேரில் கண்டு பேட்டி எடுத்து அவர்களின் படைப்பு ஒன்றையும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தினமணி கதிர் இதழில் வெளியான அந்த தொடர் பின்னர் நூல்களாக வெளிவந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தெற்கு கிழக்கு மேற்கு வடக்கு என்னும் நான்கு தொகுதிகளாக அந்நூல்கள் 1998,2000ம்2004,2009 ஆண்டுகளில் வெளிவந்தன.

நூல்கள்

சிவசங்கரி ஏறத்தாழ 150 சிறுகதைகள், 36 நாவல்கள், 48 குறு நாவல்கள் எழுதியுள்ளார். 1996 ம் ஆண்டு அம்மா சொன்ன கதைகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பேசும் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். (Link should be given for book list)

திரைப்பட பங்களிப்பு

சிவசங்கரியின் நான்கு நாவல்கள் தமிழில் திரைப்படமாக எடுக்கப் பட்டிருக்கின்றன.

  • அவன் அவள் அது (ஒரு சிங்கம் முயலாகிறது நாவல்) (1980)
  • 47 நாட்கள் (1981)
  • நண்டு (1981)
  • குட்டி (2001)

விருதுகள்

சிவசங்கரி பெற்ற விருதுகள்

  • கஸ்துரி சீனிவாசன் விருது, பாலங்கள் நாவலுக்காக. 1983-84.
  • ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் விருது 1988 f(சின்னநூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது கட்டுரைத்தொகுதிக்காக
  • பாரதீய பாஷாபரிஷத் விருது.1989-90. (வேரில்லாத மரங்கள் நாவலுக்காக)
  • தஞ்சை தமிழ்ப்பல்கலையின் தமிழன்னை விருது 1989.
  • ராஜீவ் காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, இந்தியாவை இணைத்துக்கட்டு நூல்களுக்காக
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது. குழந்தை இலக்கியத்துக்காக 1998 (அம்மா சொன்ன கதைகள்)
  • ப்ரேம்சந்த் ராஷ்ட்ரீய சாகித்ய சம்மான் விருது 2001.
  • நல்லி திசையெட்டும் விருது. மொழியாக்கம் நான் நானாக நூலின் தெலுங்கு வடிவம்r 2007.
  • கோபிசந்த் இலக்கிய விருது. யுவகலாவாணி.ஆந்திரா 2008.
  • கே.சுவாமிநாதன் நினைவு விருது, கம்பன் கழகம்,சென்னை. 2009.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் கல்லூரி-2010.
  • பொற்றாமரை விருது பொற்றாமரை கலையிலக்கிய கழகம்2013.
  • இலக்கியசிந்தனை வாழ்நாள் விருதுl 2015.
  • கோவை தமிழ்க்கலாச்சாரக் கழக விருது. 2016.
  • பாரதியார் விருது, பாரதிசங்கம்,சென்னை .2017
  • குலோத்துங்கன் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை விருது சென்னை 2017
  • தங்கத்தாரகை விருது நியூஸ்7 ஊடகம் 2018.
  • இந்திய வட்டமேஜை அமைப்பு, இந்தியாவின் பெருமிதம் விருது 2018.
  • வாழ்நாள் சாதனை விருது Tag Corporation 2019.
  • பாரதி தேசிய விருது, தமிழ்நாடு அரசு. 2019

நூல்கள்

நாவல்கள்
  • எதற்காக? - 1970
  • திரிவேணி சங்கமம் - 1971
  • ஏன்? - 1973
  • சியாமா - 1973
  • நண்டு - 1975
  • நதியின் வேகத்தோடு - 1975
  • மெள்ள மெள்ள - 1978
  • 47 நாட்கள் - 1978
  • அம்மா, ப்ளீஸ் எனக்காக. - 1979
  • ஆயுள் தண்டனை - 1979
  • வளர்த்த கடா - 1979
  • இரண்டு பேர் - 1979
  • ஒரு மனிதனின் கதை - 1980
  • பிராயச்சித்தம் - 1981
  • போகப்போக - 1981
  • நெருஞ்சி முள் - 1981
  • தவம் - 1982
  • திரிசங்கு சொர்க்கம் - 1982
  • மாலையில் பூக்கும் மலர்கள் - 1982
  • பறவை - 1982
  • பாலங்கள் - 1983
  • ஆயிரங்காலத்துப் பயிர் - 1983
  • கருணைக் கொலை - 1984
  • அவன் - 1985
  • ஒற்றைப் பறவை - 1985
  • அது சரி, அப்புறம்? - 1985
  • நூலேணி - 1985
  • அம்மா பிள்ளை - - 1986
  • மலையின் அடுத்த பக்கம் - 1987
  • வேரில்லாத மரங்கள் - 1987
  • வானத்து நிலா - 1989
  • ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989
  • நான் நானாக - 1990
  • சுட்டமண் - 1991
  • இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992
  • இனி - 1993
குறுநாவல்கள்
  • இந்திராவின் கதை - 1972
அப்பா - 1989
குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
  • அம்மா சொன்ன கதைகள் ( புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது ) - 1996
இலக்கிய ஆய்வு
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 4 - வடக்கு - 2009

உசாத்துணை

https://www.sivasankari.in