சிவக்கொழுந்து சிவாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 08:07, 29 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சிவக்கொழுந்து சிவாச்சாரியார் ( பொயு 16 ஆம் நூற்றாண்டு) சிவாக்கிர யோகிகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சைவசித்தாந்த மரபுகளில் ஒன்று சிவாக்கிர யோகிகள் மரபு எனப்படுகிறது. சைவத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் ( பொயு 16 ஆம் நூற்றாண்டு) சிவாக்கிர யோகிகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சைவசித்தாந்த மரபுகளில் ஒன்று சிவாக்கிர யோகிகள் மரபு எனப்படுகிறது. சைவத்துறவிகள் துறவு பூணவேண்டிய முறை, ஒழுகவேண்டிய முறை ஆகியவற்றை வகுத்துரைத்தவர்

(பார்க்க சிவக்கொழுந்து தேசிகர் )

பிறப்பு, காலம்

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் பொயு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் எனப்படுவதுண்டு.வேளாள மரபில் அருக்கவனம் என்னும் சூரியனார் கோயிலில் பிறந்து அங்கேயே மடம் அமைத்து வாழ்ந்தார். திருவீழிமிழலையில் மன்னர் அமைத்துத் தந்த மடத்தில் வாழ்ந்தார். மிழலை சிவாக்கிரர் என்றும் அழைக்கப்பட்டார்