சிவக்கொழுந்து சிவாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 22:02, 29 June 2022 by Jeyamohan (talk | contribs)

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் ( பொயு 16 ஆம் நூற்றாண்டு) சிவாக்கிர யோகிகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சைவசித்தாந்த மரபுகளில் ஒன்று சிவாக்கிர யோகிகள் மரபு எனப்படுகிறது. சைவத்துறவிகள் துறவு பூணவேண்டிய முறை, ஒழுகவேண்டிய முறை ஆகியவற்றை வகுத்துரைத்தவர்

(பார்க்க சிவக்கொழுந்து தேசிகர் )

பிறப்பு, காலம்

சிவக்கொழுந்து சிவாச்சாரியார் பொயு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் எனப்படுவதுண்டு.வேளாள மரபில் அருக்கவனம் என்னும் சூரியனார் கோயிலில் பிறந்து அங்கேயே மடம் அமைத்து வாழ்ந்தார். திருவீழிமிழலையில் மன்னர் அமைத்துத் தந்த மடத்தில் வாழ்ந்தார். என்றும் அழைக்கப்பட்டார்

நூல்கள்

  • சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை
  • சிவநெறிப் பிரகாசம்
  • சிவஞான சித்தியார் உரை
  • சைவபரிபாஷை (வடமொழி நூல்)
  • கிரியா தீபிகை (வடமொழி நூல்)
  • சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)
  • சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)
  • சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005