under review

சிவகௌரி புஸ்பராசன்

From Tamil Wiki
Revision as of 12:38, 8 May 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிவகௌரி புஸ்பராசன் (பிறப்பு: டிசம்பர் 17, 1973) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவகௌரி புஸ்பராசன் இலங்கை மன்னாரில் டிசம்பர் 17, 1973-ல் பிருந்தாவனநாதன், ராஜராஜேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை கௌரியம்மாள் பாடசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை புனித சவேரியார் பெண்கள் பாடசாலையிலும் கற்றார். புவியியல் இளமாணிப்பட்டம் பெற்றார். சமூகவியலில் முதுமாணிப்பட்டம் பெற்றார். தேசிய தொழில் வழிகாட்டலில் டிப்ளோமா பட்டம் பெற்றார். மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

  • மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்.
  • பிரதேச கலாசார பேரவையில் இணைந்து செயற்பட்டார்.
  • கலாசாரப் பேரவையினால் வெளியிடப்படும் மன்னார் நூல் மலர்க்குழுவில் இணைந்து பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சிவகௌரி புஸ்பராசன் ”அது ஒரு கனாக்காலம்” என்னும் தலைப்பில் கவிதை நூலை வெளியிட்டார். பிரதேச மற்றும் மாவட்ட மட்ட கலாசார போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசில்களை வென்றார். இவரின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் மன்னாரில் வெளிவரும் பல சஞ்சிகைகளிலும் மலர்களிலும் வெளிவந்தன. ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூலிலும் இவரின் கவிதை இடம்பெற்றது.

விருதுகள்

  • மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் மன்னாரின் சிறப்புக்கள் தொடர்பாக இயற்றப்பட்ட பாடலுக்காக கனடா உலக பல்கலைக்கழக சேவை விருது வழங்கியது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • அது ஒரு கனாக்காலம்

உசாத்துணை


✅Finalised Page