சிலோன் விஜயேந்திரன்

From Tamil Wiki
சிலோன் விஜயேந்திரன்

சிலோன் விஜயேந்திரன் ( ) திரைநடிகர், நாடக நடிகர், பாடகர். கவிஞர் கம்பதாசனின் தீவிரமான வாசகர். கம்பதாசனின் கவிதைகளை தொகுத்து நூலாக்குவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர்

பிறப்பு, கல்வி

சிலோன் விஜயேந்திரன் கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் .தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் எனப் பல பட்டங்கள் பெற்றவர்.

திரை வாழ்க்கை

இலங்கையில் நாடகநடிகராக அறியப்பட்டிருந்த சிலோன் விஜயேந்திரன் 19ல் இலங்கை பின்னணியில் தயாரிக்கப்பட்டு 1978ல் வெளிவந்த பைலட் பிரேம்நாத் என்ற படத்தில் அறிமுகமானார். `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார். தெலுங்கில் பிரளயசிம்மன் என்னும் படத்தில் அறிமுகமாகி ஐம்பது படங்களுக்குமேல் நடித்தார். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சிலோன் விஜயேந்திரன் நாடகங்கள் எழுதியிருக்கிறார். பாடல்களும், மரபுக்கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் முதன்மையாக அவர் கவிஞர் கம்பதாசனின்l தீவிரமான ரசிகராகவே அறியப்படுகிறார். கம்பதாசன் பரவலாக மறக்கப்பட்ட சூழலில் அவருடைய திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.

சிலோன் விஜயேந்திரன் `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

`அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவை.

சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது.

ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது.


மறைவு

சிலோன் விஜயேந்திரன் 26 ஆகஸ்ட் 2008 அன்று தன் 58 ஆவது வயதில் தான் தனித்து குடியிருந்த சிறு அறையில் ஒரு தீவிபத்தில் மறைந்தார்.