சிற்றிதழ்

From Tamil Wiki
Revision as of 10:37, 24 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சிற்றிதழ்: தன் வாசகர்களின் தரம் எண்ணிக்கை ஆகியவற்றை வரையறை செய்துகொண்டு, அவர்களுக்காக மட்டுமே வெளியிடப்படும் இதழ். பொதுவாசகர்களுக்கு உரியதல்ல என தன்னை கொள்கை அடிப்படையில் வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிற்றிதழ்: தன் வாசகர்களின் தரம் எண்ணிக்கை ஆகியவற்றை வரையறை செய்துகொண்டு, அவர்களுக்காக மட்டுமே வெளியிடப்படும் இதழ். பொதுவாசகர்களுக்கு உரியதல்ல என தன்னை கொள்கை அடிப்படையில் வரையறை செய்துகொண்டது. தன் வாசகர்வட்டத்திற்கு புரியும் மொழிநடை, கலைச்சொற்கள் ஆகியவற்றுடன் செயல்படுவது.

இலக்கியம், தத்துவம் ஆகிய தளங்களிலேயே பொதுவாகச் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. இதே இயல்புகொண்ட இதழ்கள் குறிப்பிட்ட அறிவுத்துறை அல்லது தொழில்துறை சார்ந்து வருவதுண்டு. அவை துறைசார் இதழ்கள் எனப்படுகின்றன. கல்வித்துறை சார்ந்தும் இதே இயல்புகொண்ட இதழ்கள் வெளிவருவதுண்டு. அவற்றை கல்வியிதழ்கள் என வரையறை செய்கிறார்கள்.

தமிழில் சிற்றிதழ்கள் இலக்கியம் சார்ந்தே பெரும்பாலும் வெளிவருகின்றன. மரபிலக்கியம் சார்ந்தும் நவீன இலக்கியம் சார்ந்தும் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன.

சிற்றிதழ் வரலாறு