சிற்றம்பல நாடிகள்

From Tamil Wiki
Revision as of 02:47, 8 February 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "சிற்றம்பல நாடிகள்(பழுதைக்கட்டி சிற்றம்பல நாடிகள்) ஓர் சைவப் பெரியார். == வாழ்க்கைக் குறிப்பு == சிற்றம்பல நாடிகள் சீர்காழிக்கருகிலுள்ள புள்ளிருக்கும் வேளூரில் 14-ஆம் நூற்றாண்டி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிற்றம்பல நாடிகள்(பழுதைக்கட்டி சிற்றம்பல நாடிகள்) ஓர் சைவப் பெரியார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிற்றம்பல நாடிகள் சீர்காழிக்கருகிலுள்ள புள்ளிருக்கும் வேளூரில் 14-ஆம் நூற்றாண்டில் வேளாளர் குலத்தில் பிறந்தார். சீர்காழியில் இருந்த ‘கங்கை மெய்கண்டார்’ என்பவரின் மாணவர். தில்லைச் சிற்றம்பலத்தின் மீதிருந்த பெரும் ஈடுபாட்டால் இவர் நாடியதால், இவர் தம் நாடித்துடிப்பாகக் கொண்டிருந்ததால், ‘சிற்றம்பல நாடிகள்’ எனப் போற்றப்பட்டார்.