சிறுவர் இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 10:07, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சிறுவர் இதழ்கள் (சிறார் இதழ்கள் ( குழந்தை இலக்கியம் ) தமிழில் 1840 முதல் தொடர்ச்சியாக சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடநூல்களுக்கு வெளியே குழந்தைகளின் வாசிப்பை நில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிறுவர் இதழ்கள் (சிறார் இதழ்கள் ( குழந்தை இலக்கியம் ) தமிழில் 1840 முதல் தொடர்ச்சியாக சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடநூல்களுக்கு வெளியே குழந்தைகளின் வாசிப்பை நிலைநிறுத்தும்பொருட்டு இவை உருவாயின. தமிழகத்தில் 1947ல் இந்தியச் சுதந்தித்திற்குப்பின் ஆரம்பப் பள்ளி இயக்கம் உருவானபோது பள்ளிகளில் சிறுவர் இதழ்கள் ஏராளமாக வாங்கப்பட்டன. பின்னர் 2000 த்துக்குபின் ஆங்கில வழிக்கல்வி பரவலானபோது சிறுவர் இதழ்களின் செல்வாக்கு குறைந்தது. பல சிறுவர் இதழ்கள் நின்றுவிட்டன.

தோற்றம்

1840-ஆம் ஆண்டில் கிறிஸ்தவ அமைப்பினரால் வெளியிடப்பட்ட பாலதீபிகை என்னும் இதழ் தமிழில் வெளிவந்த முதல் சிறுவர் இதழ் எனப்படுகிறது. சுமார் 22-ஆண்டுகள் வெளிவந்த அவ்விதழ் நின்று போனது. தமிழில் வெளிவந்த முதல் சிறுவர் இதழ் என பூவண்ணன் தனது ‘குழந்தை இலக்கிய வரலாறு’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சி

1940களில் இந்தியாவில் ஆரம்பக் கல்வி வலுப்பெற தொடங்கியது. 1950 களில் ஆரம்பக்கல்வி இயக்கம் நிகழ்ந்தது. அதையொட்டி ஏராளமான சிறுவர் இதழ்கள் உருவாயின. புகழ்பெற்ற வணிக இதழ்களான குமுதம் (ஜிங்லி) கல்கி (கோகுலம்) கலைமகள் (கண்ணன்) போன்றவையும் சிறுவர் இதழ்களை நடத்தின. 1947ல் வெளிவரத் தொடங்கிய அம்புலி மாமா இதழ் சிறுவர் இதழ்களில் மிகப்புகழ்பெற்றது.

குழந்தை எழுத்தாளர்களும் 1950 முதல் நாற்பதாண்டுக்காலம் தொடர்ச்சியாகச் செயல்பட்டனர். பூவண்ணன் (கரும்பு) அழ.வள்ளியப்பா (பூஞ்சோலை) மகிழ்ச்சிக் கண்ணன் (மத்தாப்பு) சக்தி கோவிந்தன் (அணில்) நாரா. நாச்சியப்பன் (முத்து) சௌந்தர் (ரேடியோ) வாண்டு மாமா (வானவில், கிங்கிணி) எஸ்.வஜ்ரவேலு (பூந்தோட்டம் ) ரா.கி.ரங்கராஜன் (வானரசேனை) ஓவியர் சந்தனு (சித்திரக் குள்ளன்) புலிவேந்தன் (அணில்) நவீனன் (யுவன் ) கலைவாணன் (மான்)

சிறுவர் இதழ்கள்

பாலியர் நேசன்

பாலவிநோதினி

பாலர் மலர்

பாலர் முரசு

பாப்பா

பாப்பா மலர்

அணில்

அணில் மாமா

சங்கு

டமாரம்

டிங் - டாங்

கரும்பு

பார்வதி

அம்பி

முத்து

கண்ணன்

சின்னக் கண்ணன்

முயல்

கிளி

அல்வா

பூஞ்சோலை

சிறுவர் உலகம்

ரேடியோ

குஞ்சு

ஜில் ஜில்

வானர சேனன்

மத்தாப்பு

ஜிங்லி

சாக்லெட்

மிட்டாய்

அம்புலி மாமா

பொம்மை வீடு

சித்திரக் குள்ளன்

சித்திரா

சிற்பி

அன்னம்

சந்திர ஒளி

கங்கணம்

மயில்

தமிழ்ச்சிட்டு

கோகுலம்

துளிர்

ரத்னபாலா

பூந்தளிர்

கல்கண்டு

அரும்பு

உசாத்துணை