சிரேயன்சுவநாதர்

From Tamil Wiki
Revision as of 16:55, 28 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "சிரேயன்சுவநாதர் சமண சமயத்தின் பதினொன்றாவது தீர்த்தங்கரர். == புராணம் == இக்சவாகு குலமன்னர் விஷ்ணுவிற்கும், இராணி விஷ்ணுதேவிக்கும், சாரநாத் அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிரேயன்சுவநாதர் சமண சமயத்தின் பதினொன்றாவது தீர்த்தங்கரர்.

புராணம்

இக்சவாகு குலமன்னர் விஷ்ணுவிற்கும், இராணி விஷ்ணுதேவிக்கும், சாரநாத் அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தார். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞான சித்தராக விளங்கினார். தற்கால இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: பொன்னிறம்
  • லாஞ்சனம்: காணடாமிருகம்
  • மரம்: தும்புரு மரம்
  • உயரம்: 80 வில் (240 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 84 லட்சம் ஆண்டுகள்
  • முதல் உணவு: செளமனஸ் மன்னர் பத்மா அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 81 (அங்கர்)
  • யட்சன்: பிரம்மேஷ்வர் தேவ்
  • யட்சினி: மானவி தேவி

கோயில்கள்

  • திகம்பரர் சமனக் கோயில், சிம்ம்புரி, சாரநாத்
  • சிரேயன்சுவநாதரின் 18ம் நூற்றாண்டின் ஓவியம், குஜராத்
  • சிரேயன்சுவநாதர், நேமிநாதர் மற்றும் அஜிதநாதர் சிற்பங்கள், பந்த் தேவால், ராய்ப்பூர், சத்தீஸ்கர்
  • சிரேயன்சுவநாதர் சன்னதி, சிகார்ஜி

உசாத்துணை