சிரித்திரன்

From Tamil Wiki
Revision as of 20:13, 27 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சிரித்திரன் (1963-1995 ) இலங்கையில் வெளிவந்த நகைச்சுவை இதழ். அரசியல் கேலிச்சித்திரங்களுக்காகவும் சமூகவிமர்சனத்துக்காகவும் புகழ்பெற்றது வரலாறு சிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிரித்திரன் (1963-1995 ) இலங்கையில் வெளிவந்த நகைச்சுவை இதழ். அரசியல் கேலிச்சித்திரங்களுக்காகவும் சமூகவிமர்சனத்துக்காகவும் புகழ்பெற்றது

வரலாறு

சிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சிவஞானசுந்தரம் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்தது. சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீள்பதிப்பிக்கப்பட்டு 2021 சனவரி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக  வெளியிடப்பட்டு வருகின்றது.

உள்ளடக்கம்

கேலிச்சித்திரங்கள், பகடிக்கட்டுரைகள் மற்றும் நடைச்சித்திரங்கள் இதில் இடம்பெற்றன. 'மகுடி பதில்கள்' என்னும் தலைப்பில் சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் புகழ்பெற்றது . எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்தது. திக்ககவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் சிரித்திரனில் எழுதிய ஆரம்பகால எழுத்தாளர்கள். எஸ். அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் என பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" . செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகிய புகழ்பெற்ற படைப்புகள் வெளியிடப்பட்டன.

உசாத்துணை