under review

சிந்தாநதி: Difference between revisions

From Tamil Wiki
(Finalised)
Line 18: Line 18:
* [https://azhiyasudargal.blogspot.com/2012/04/blog-post_20.html சிந்தாநதி கட்டுரை. லா.ச.ரா]
* [https://azhiyasudargal.blogspot.com/2012/04/blog-post_20.html சிந்தாநதி கட்டுரை. லா.ச.ரா]
* [https://old.thinnai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ சிந்தாநதி சகாப்தம் அசோகமித்திரன்]

{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 09:06, 9 November 2023

சிந்தாநதி

சிந்தாநதி (1984 ) லா.ச.ராமாமிர்தம் எழுதிய தன்வரலாற்றுப் புனைவு. தன் இளமை வாழ்க்கையின் சித்திரங்களை இந்நூலில் லா.ச.ரா தனக்குரிய தாவிச்செல்லும் நனவோடை முறையில் எழுதுகிறார்.லா.ச.ராவுக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சிந்தாநதி தினமணிக் கதிரில் தொடராக வந்தது.

எழுத்து,வெளியீடு

லா.ச. ராமாமிர்தம் எழுதிய சிந்தாநதி 1984 ல் தினமணிக்கதிர் வார இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1987ல் அதை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. சிந்தாநதி என்ற பேரில் லா.ச.ரா ஒரு நினைவோடைக் கட்டுரையை 1968ல் எழுதியிருக்கிறார்.

உள்ளடக்கம்

இந்நூல் லா.ச.ராவின் இளமைப்பருவ நினைவுகளை நனவோடை முறையில் கூறுகிறது. புனைவுக்கு மிக அணுக்கமான கூறுமுறை கொண்டது. ’சிந்தாநதி என் எஸ்டேட்டில் ஓடும் எனக்கே சொந்த நதி அல்ல. உயிரின் பரம்பரை’ என லா.ச.ரா தன் முன்னுரையில் சொல்கிறார்.அம்மா என்னும் முதல் அத்தியாயம் முதல் சாக்ஷிகற்பூரம் என்னும் இறுதி அத்தியாயம் வரை 22 பகுதிகள் கொண்டது

விருது

சிந்தாநதிக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது அளிக்கப்பட்டது

இலக்கிய இடம்

தமிழில் எழுதப்பட்ட இலக்கியவாதிகளின் தன்வரலாறுகளில் குறிப்பிடத்தக்கதாக சிந்தாநதி கருதப்படுகிறது. லா.ச.ராவின் புனைவுலகின் பகுதியாக வாசிக்கத்தக்கது.

உசாத்துணை

✅Finalised Page