under review

சாற்றுக் கவிகள்

From Tamil Wiki
Revision as of 18:54, 29 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "சாற்றுக் கவிகள் என்பது புதிதாக நூல் இயற்றும் ஆசிரியர் மேல் பாயிரம் அமைப்பது. == சூத்திரம் == <poem> ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே </poem> == வரலாறு == பொ.யு. 19-ஆம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சாற்றுக் கவிகள் என்பது புதிதாக நூல் இயற்றும் ஆசிரியர் மேல் பாயிரம் அமைப்பது.

சூத்திரம்

ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே

வரலாறு

பொ.யு. 19-ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடியாக இருந்த பழய நூல்களை அச்சுப் புத்தகமாக அச்சிட்ட அறிஞர்களும், புதிதாக நூல்களை இயற்றி பதிப்பித்தவர்களும், தம்முடன் பயின்றவர், நண்பர், ஆசிரியர், மாணவர்களிடமிருந்து சாற்றுக் கவிகளைப் பெற்றுத் தமது நூலில் அச்சிட்டனர். சாற்றுக் கவிகள் இல்லாத நூல்கள் அக்காலத்தில் மிகச்சில. சாற்றுக்கவி அச்சிடும் வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்துவந்தது.

விளக்கம்

பாயிரம் வழங்குவோர் நூலாசிரியரின் ஆசிரியரும், அவருடன் பயின்றவரும், அவர் மாணாக்கரும் ஆகிய மூவரில் ஒருவராக இருப்பர். நூலுக்கு உரை எழுதும் உரையாசிரியரும் பாயிரம் கூறுவர். சாற்றுக் கவிகள் எல்லாம் செய்யுளாகவே இருந்தன.

பயன்கள்

  • சாற்றுக் கவிகளின் மூலம் அதன் நூல், ஆசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் பற்றி அறியலாம்.
  • சாற்றுக் கவி வழங்கியவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
  • ஒரே காலத்தில் இருந்த புலவர்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
  • சென்ற 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த நூல்களிலே உள்ள சாற்றுக் கவிகளை தொகுத்து அச்சிட்டால் புலவர்கள் வரலாறும், இலக்கியங்களின் வரலாறும், செய்திகளும் அறிய முடியும்
  • அந்தந்த நூல் வெளியிட்ட ஆசிரியர்களின் காலத்திலிருந்த புலவர்கள் பெயரையும் அவர்களின் தொழில் ஊரையும் தெரிந்து கொள்ளலாம்.

வேறு பெயர்கள்

  • சிறப்புப் பாயிரம்
  • சாத்துக் கவி
  • சார்த்துக்கவி

சாற்றுக்கவி நடை

அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் பதுமபந்த வெண்பாவால் சுந்தரமுதலியார் இசைப்பாடல்களுக்கு சாற்றுக்கவி பாடியுள்ளார்.

சோதிபதி பூதிச்தி சோதிமதி நீதிவிதி
சோதியிலை யென்னி லென்னத் தோன்றியுறை -நீதில்
மயிலைகற் சர்தர மாகலிஞன் செய்யுள்
வியன்முப் பழச்சலைக்கு மேல்.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.