சாரு நிவேதிதா

From Tamil Wiki
Revision as of 20:13, 29 April 2022 by Jeyamohan (talk | contribs)

சாரு நிவேதிதா (18 டிசம்பர் 1953) தமிழ் எழுத்தாளர். தமிழில் பின்நவீனத்துவ - பின் அமைப்பியல் சார்ந்த அழகியலைக் கொண்ட எழுத்தாளர்களில் முதன்மையானவராகவும், பிறழ்வெழுத்து என்னும் இலக்கியவகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். பலதுறைசெய்திகளை இணைத்து எழுதும் கலைக்களஞ்சியத்தன்மை, எழுத்தைப்பற்றியே எழுதும் மீபுனைவுத்தன்மை, அனைத்தையும் விளையாட்டாக ஆக்கும் தன்மை, ஒழுக்கவியல் எல்லைகளையும் அரசியல்சரிநிலைகளையும் மீறிச்செல்லும் தன்மை, அமைப்புகளுக்கு எதிரான கலகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட எழுத்துக்களை எழுதியவராக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சாரு நிவேதிதாவின் இயற்பெயர் அறிவழகன். அரசுவேலையில் இருந்தமையால் சாரு நிவேதிதா என்று பெயர் சூட்டிக்கொண்டார். அக்காலகட்டத்தில் இடதுசாரி புரட்சிகர இயக்கங்களின் ஆதராவாளராக இருந்தமையால் நக்ஸலைட் இயக்கத்தின் கோட்பாட்டாளரும் நிறுவனருமான துசாரு மஜூம்தாரின் பெயரில் இருந்து தன் பெயரை உருவாக்கிக் கொண்டார். நாகப்பட்டினத்தில் 18 டிசம்பர் 1953 ல் சாரு நிவேதிதா பிறந்தார்.