under review

சாந்தகவிராயர்

From Tamil Wiki
Revision as of 18:52, 19 August 2023 by Logamadevi (talk | contribs)

சாந்தகவிராயர் (பிறசை சாந்தகவிராயர்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சாந்தகவிராயர் பொ.யு. 1800-களின் இறுதியில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சாந்தகவிராயர் 'நீதிசூடாமணி' என்று வழங்கும் 'இரங்கேசர் வெண்பா' எழுதினார். ஸ்ரீரங்கத்திலுள்ள விஷ்ணு மீது இரங்கேசர் வெண்பா பாடப்பட்டது. இதில் காப்பு வெண்பாவில் சொல்லியபடி, ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு குறளும் தெரிந்து சொல்லப்பட்டன.

பாடல் நடை

  • இரங்கேசர் வெண்பா

சீர்கொண்ட காவேரித் தென்னரங்கத் தெம்பெருமான்
பார்கொண்ட தாளைப் பரவியே-ஏர்கொண்ட
ஓங்குபுகழ் வள்ளுவன ரோதுகுறண் முக்கதையைப்
பாங்குபெறச் சொல்வேன் பரிந்து

  • காப்பு வெண்பா

சொன்னகம்பத் தேமடங்க ருேன்றுவதா லன்பருளத்
தின்னமிர்த மாகு மிரங்கேசா- மன்னும்
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு

நூல்கள்

  • நீதி சூடாமணி அல்லது இரங்கேசர் வெண்பா

உசாத்துணை


✅Finalised Page