under review

சாடோங் இளவரசி

From Tamil Wiki
Revision as of 17:18, 18 November 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb இளவரசி சாடோங் கிளந்தான் மாநிலத்தின் புராணக்கதைகளில் புகழ்பெற்றவர். இவர் மக்களின் நலனுக்காகத் தன்னை பணையம் வைத்தவர் எனப் புகழப்படுகிறார். == பின்புலம் == இளவரசி சாடோ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Indexddd.jpg

இளவரசி சாடோங் கிளந்தான் மாநிலத்தின் புராணக்கதைகளில் புகழ்பெற்றவர். இவர் மக்களின் நலனுக்காகத் தன்னை பணையம் வைத்தவர் எனப் புகழப்படுகிறார்.

பின்புலம்

இளவரசி சாடோங்  ஜெம்பாலின் (இப்போது கேடாய் லாலத் என்று அழைக்கப்படுகிறது) மிகவும் பிரபலமான அரச குடும்பத்தில் பிறந்தவர். ஜெம்பாலின் ஆட்சியாளரான லோயோர் மன்னரின் ஒரே மகள். இவரின் இயற்பெயர் சித்தி மரியம் (Siti Maryam). 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். பெற்றோர் இறந்தபின்  இளவரசி சாடோங், அப்போது தனா செரெண்டா செகெபுன் பூங்காவை தளமாகக் கொண்டிருந்த கிளந்தான் மாநில பெண் அரசி செ சித்தி வான் கெம்பாங் (Cik Siti Wan Kembang) என்பவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார்.  சாடோங் இலவரசி தனது 15 வது வயதிலேயே கிளந்தான் ஜெம்பால் அரசின் ராணியாக மகுடம் சூடப்பட்டார்; ராஜா அப்துல்லாவை (Raja Abdullah) திருமணம் செய்து கொண்டார் எனும் குறிப்புகள்  மலாய் வரலாறு (Sejarah Melayu) புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

சடோங் இளவரசி கதை

சயாம் - கிளந்தான் போரில் இளவரசி சாடோங்கின் அரசு பாதிக்கப்பட்டது. சயாம் அரசரான அரசர் நாராய் (Raja Narai) போரை நிறுத்த பணையமாக இளவரசி சாடோங்கைக்  கேட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இளவரசி மக்களின் நலனுகாக நாராய் அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டார். பிணையாகச் செல்வதற்கு முன் தான் நிச்சயம் திரும்பி வந்து விடுவதாகவும் தனக்காகக் காத்திருக்கும்படியும்  தன் கணவரிடம் உறுதி பூண்டாள் இளவரசி சாடோங். பிணையாக கொண்டு செல்லப்பட்ட இளவரசி சாடோங் நாராய் அரசனின் விரல்கூட தன்மேல் பட அனுமதிக்கவில்லை. அரசன் நாராய்க்கு திடீரென தீர்க்கவியலாத தோல் வியாதி ஏற்பட்டது. பல மூலை முடுக்குகளில் உள்ள மருத்துவர்கள் வந்தும் சயாம் அரசனின் நோயைப் போக்க முடியவில்லை. இளவரசி சாடோங், அரசருக்கு ஏற்பட்ட வியாதியைப் போக்கினால் தன்னை மீண்டும் தன் நாட்டிற்கே அனுப்பிவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சாயாம் அரசனும் அதற்குச் சம்மதித்தான். இளவரசி சாடோங் கூறியது போலவே அரசனுக்கு ஏற்பட்ட நோயைப் போக்கினார். இளவரசி சாடோங் விடுதலையாகித் திரும்பி வநதபோது அவருடைய கணவன் ராஜா அப்துல்லா வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்து சினம் கொண்டாள். நாட்டின் நலனுக்காகவும் கணவனுக்காகவும் சென்ற அவளின் தியாகத்தை மதிக்காத ராஜா அப்துல்லா இளவரசியின் கற்பின் மீதே சந்தேகம் கொண்டார். மனமுடைந்து போன இளவரசி சாடோங் தன் தலையில் செருகி இருந்த குண்டூசியால் தன் கணவனைக் கொன்றாள். அதன் பிறகு கிளந்தானிலிருந்து காணாமல் போனார் என்று கதை முடிகிறது. அவர் எங்குச் சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை. சிலர் மாராக் (Bukit Marak) எனும் குன்று பகுதியில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர்.

வெவ்வேறு நூற்றாண்டுகளில் இளவரசி சாடோங்

'சாடோங்' என்ற சொல் பெயர் அல்ல அது வழங்கப்பட்ட பட்டம் என கூறப்படுகிறது. மலாய்காரர்களின் வாய்மொழி வரலாற்றில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் சாடோங் இளவரசி  வாழ்ந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. எப்படி தமிழில் ஔவை என்ற பெயரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு பெண்புலவர்கள் இருந்தனர் என்று சொல்லப்பட்டதோ அது போல  7 ஆம் நூற்றாண்டில்,  14 ஆம் நூற்றாண்டில் மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் வெவ்வேறு சாடோங் இளவரசிகள் வாழ்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

உசாத்துணை நூல்கள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.