சாகித்ய அகாதெமி பால் சாகித்ய புரஸ்கார் விருதுகள்

From Tamil Wiki
Revision as of 23:54, 30 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Table Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பால் சாகித்ய புரஸ்கார் விருது, சிறார் இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்பாற்றும் எழுத்தாளர்களுக்கு, சாகித்ய அகாடமி நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு முதல், நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் சிறந்த குழந்தை இலக்கியப் படைப்பாளிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

பால் சாகித்திய புரஸ்கார்

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமியின்  பால் சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருது, ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதிச்சான்றும், சால்வையும், கேடயமும் கொண்டது.

பால் சாகித்திய புரஸ்கார் விருதாளர்கள் (2022 வரை)

ஆண்டு எழுத்தாளர் பெயர் படைப்பு நூலின் தன்மை
2010 மா. கமலவேலன் அந்தோணியின் ஆட்டுக்குட்டி நாவல்
2011 ம.இல. தங்கப்பா சோளக்கொள்ளை பொம்மை கவிதைகள்
2012 கொ.மா. கோதண்டம் காட்டுக்குள்ளே இசைவிழா சிறுகதைத் தொகுப்பு
2013 ரேவதி (ஈ.எஸ். ஹரிஹரன்) பவளம் தந்த பரிசு சிறுகதைத் தொகுப்பு
2014 இரா. நடராசன் விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் சிறுகதைத் தொகுப்பு
2015 செல்லக்கணபதி தேடல் வேட்டை கவிதைகள்
2016 குழ. கதிரேசன் ஒட்டு மொத்தப் பங்களிப்பிற்காக ஒட்டு மொத்தப் பங்களிப்பு
2017 வேலு சரவணன் ஒட்டு மொத்தப் பங்களிப்பிற்காக ஒட்டு மொத்தப் பங்களிப்பு
2018 கிருங்கை சேதுபதி சிறகு முளைத்த யானை கவிதைகள்
2019 தேவி நாச்சியப்பன் ஒட்டு மொத்தப் பங்களிப்பிற்காக ஒட்டு மொத்தப் பங்களிப்பு
2020 யெஸ். பாலபாரதி மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல்
2021 மு. முருகேஷ் அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை சிறுகதைத் தொகுப்பு
2022 ஜி. மீனாட்சி மல்லிகாவின் வீடு சிறுகதைத் தொகுப்பு