சமணமும் தமிழும்

From Tamil Wiki
Revision as of 20:40, 14 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சமணமும் தமிழும் (1954) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழ்ப் பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் சமண மதத்தின் பங்களிப்பை ஆராய்ந்து நிறுவும் முன்னோடி ஆய்வு. == எழுத்து வெளியீடு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சமணமும் தமிழும் (1954) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழ்ப் பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் சமண மதத்தின் பங்களிப்பை ஆராய்ந்து நிறுவும் முன்னோடி ஆய்வு.

எழுத்து வெளியீடு

மயிலை சீனி. வேங்கடசாமி 1940 முதல் இந்நூலை எழுத தொடங்கினார். 1954ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலை வெளியிட்டது. இந்நூலுக்கு முன்னோடியாக மயிலை சீனி.வேங்கடசாமி காந்தருவதத்தையின் இசைத்திருமணம் என்னும் நூலை 23டிசம்பர் 1943 ல் வெளியிட்டார். அதில் சமணமும் தமிழும் என்னும் நூல் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடப்படுகிறது. இது முதல்நூலே என்றும் அடுத்த பகுதி வெளிவரும் என்றும் இந்நூலின் முன்னுரையில் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இரண்டாம் பகுதி வெளிவரவில்லை.

உள்ளடக்கம்

விருது

1961ல் இந்நூலுக்கு சிறந்த தமிழ் நூலுக்கான தமிழக அரசின் கேடயம் வழங்கப்பட்டது

உசாத்துணை

சமணமும் தமிழும் இணைய நூலகம்