சபரிநாதன்

From Tamil Wiki
Revision as of 20:10, 2 November 2022 by Muth r (talk | contribs)

சபரிநாதன் (பிறப்பு: ஜனவரி 08, 1989) தமிழ்க்கவிஞர். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருபவர்.

பிறப்பு, தனிவாழ்க்கை

சபரிநாதன் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோவில்பட்டியில் சம்பத் - முருகலஷ்மி தம்பதியருக்கு ஜனவரி 08, 1989 ல் பிறந்தார். R. C. சூசை மேல்நிலை பள்ளி, கழுகுமலையில் ஆரம்ப கல்வியும் புனித பால் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, கோவில்பட்டியில் உயர்நிலை கல்வியும் கற்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் Electronics and Communications துறையில் பட்டம் பெற்றார்.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பணியாற்றுகிறார்.

2017-ல் யுஹமதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மகள் மீரா மற்றும் மகன் அருகன். சென்னையில் வசிக்கிறார்கள்.

சபரிநாதன்