under review

சந்திரோதயம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
(Removed non-breaking space character)
Line 5: Line 5:

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
சந்திரோதயத்தில்  'ஊர்க்குருவி’ என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு அரசியல் பற்றியும், 'திக்விஜயம்’ என்னும் தலைப்பில் இந்திய அரசியல் மற்றும் அயல்நாட்டு அரசியல் பற்றியும் அலசப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சி பற்றியும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.  சங்கீதம், சினிமா பற்றி 'பாட்டும், கூத்தும்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளன. இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் மகளான லலிதா கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள சமையல் கட்டுரைத் தொடர் ஒன்றும் வெளியாகியுள்ளது. உலக இலக்கியம், மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 'காலத்தேவன் அடிச்சுவடு’ என்னும் பத்தியில் உலக இலக்கியம் பற்றி எழுதப்பட்டுள்ளன. 'பெரிய மனிதர்’ என்னும் தலைப்பில் ஸ்டாலின், லெனின், ட்ரூமன் போன்ற அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்த அரசியல் தலைவர்கள் பற்றிய சொற்சித்திரங்கள் வெளியாகியுள்ளன.

இவையெல்லாவற்றிலும் எழுதியவரின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் எழுத்து நடையை ஒப்பிடும்போது அவற்றைக் க.நா.சுதான் எழுதியிருக்க வேண்டும் என்று கி.ஆ.சச்சிதானந்தம் கருதுகிறார். சூறாவளியைப்போல முழுமையான வணிக இதழாக இல்லாமல்  'சந்திரோதய’த்தில் புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்கள் எழுதியுள்ளனர்.  

Revision as of 14:50, 31 December 2022

சந்திரோதயம் (1945-1946) க.நா.சுப்ரமணியம் தொடங்கி நடத்திய இதழ். க.நா.சுப்ரமணியம் இடைநிலை இதழாக இதை நடத்தினார். அரசியல், சினிமா ஆகியவற்றுடன் இலக்கியமும் இதில் இடம்பெற்றது.

வரலாறு

க.நா.சுப்ரமணியம் சூறாவளி என்னும் வணிகநோக்குள்ள வார இதழை 1939-ல் தொடங்கி ஓராண்டிலேயே நிறுத்தினார். அதன் பின் பதினாறாண்டுகளுக்குப் பிறகு சந்திரோதயம் என்னும் இதழை தொடங்கினார். சந்திரோதயத்தின் முதல் இதழ் 1945-ஆம் ஆண்டு வெளியானது. 'சந்திரோதய’மும் 'சூறாவளி’யைப் போலவே, 'க்ரௌன்’ அளவில் 64 பக்கங்களில் வெளியானது. இரண்டு ஆண்டுகளில் சந்திரோதயம் நிறுத்தப்பட்டது.

உள்ளடக்கம்

சந்திரோதயத்தில் 'ஊர்க்குருவி’ என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு அரசியல் பற்றியும், 'திக்விஜயம்’ என்னும் தலைப்பில் இந்திய அரசியல் மற்றும் அயல்நாட்டு அரசியல் பற்றியும் அலசப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சி பற்றியும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சங்கீதம், சினிமா பற்றி 'பாட்டும், கூத்தும்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளன. இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் மகளான லலிதா கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள சமையல் கட்டுரைத் தொடர் ஒன்றும் வெளியாகியுள்ளது. உலக இலக்கியம், மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 'காலத்தேவன் அடிச்சுவடு’ என்னும் பத்தியில் உலக இலக்கியம் பற்றி எழுதப்பட்டுள்ளன. 'பெரிய மனிதர்’ என்னும் தலைப்பில் ஸ்டாலின், லெனின், ட்ரூமன் போன்ற அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்த அரசியல் தலைவர்கள் பற்றிய சொற்சித்திரங்கள் வெளியாகியுள்ளன.

இவையெல்லாவற்றிலும் எழுதியவரின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் எழுத்து நடையை ஒப்பிடும்போது அவற்றைக் க.நா.சுதான் எழுதியிருக்க வேண்டும் என்று கி.ஆ.சச்சிதானந்தம் கருதுகிறார். சூறாவளியைப்போல முழுமையான வணிக இதழாக இல்லாமல் 'சந்திரோதய’த்தில் புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்கள் எழுதியுள்ளனர்.

'சந்திரோதயம’, மாலை 10, மலர் 7 (அக்டோபர் 20, 1945) இதழில் பக்கம் 56-ல் கண்டனம் என்னும் பத்தியில் 'மு. அருணாசலமும் தமிழ் மறுமலர்ச்சியும்’ என்னும் நூல் மதிப்புரை வெளியாகியுள்ளது. ’இலக்கியத்திற்குப் பண்டிதர்கள் மட்டும் விரோதிகள் அல்ல. இலக்கியத்தை முறையாகப் படித்து விட்டதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிற எல்லோருமே பரம விரோதிகள்தான். தமிழை முறையாகப் படித்து விட்ட காரணத்தினால் மரபு தெரிந்து விடலாம். ஆனால் அறிவு மழுங்கி விடுகிறது. ரசனை குன்றி விடுகிறது." 1945-ஆம் ஆண்டில் க.நா.சுவுக்கு ஏற்பட்ட இந்த எண்ணம் ஆண்டு செல்ல, செல்ல உறுதியாகி வருகிறது. இதற்குப் பிறகான அவரது படைப்புகளும், அவர் ஊக்குவித்த எழுத்தாளர்களின் படைப்புகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன என ஆய்வாளர் கி.ஆ.சச்சிதானந்தம் சொல்கிறார்.

1946-ஆம் ஆண்டு 'சந்திரோதயம்’ பொங்கல் இதழில் (மாலை 16, மலர் 12) ’காலத்தேவன் அடிச்சுவடு’ பத்தியில் அவர் எழுதுகிறார்: "உலகத்து இலக்கியங்களிலே மகோன்னதமான சிகரங்கள் பல இருக்கின்றன… தமிழ் மரபு தெரியவேண்டும் என்றும் அதில்லா விட்டால் தமிழிலே இலக்கியமே சாத்தியமில்லை என்றும் கூறுகிறவர்களுக்குப் பதில் கூறுவது போல உலக இலக்கிய மரபுகள் தெரிய வேண்டும், அது தெரியாமல் இலக்கிய சிருஷ்டி செய்ய முற்படுவது வீண் வியர்த்தம் என்று சொல்லலாம்." சந்திரோதயம் நின்றுவிட்டபின் க.நா.சுப்ரமணியம் வணிகநோக்கில் பொதுவாசிப்புக்கான இதழ்களை நடத்தவில்லை. சிற்றிதழ்களே இலக்கியத்திற்கு தேவை என்னும் முடிவை வந்தடைந்தார்.

இலக்கிய இடம்

க.நா.சுப்ரமணியம் அன்று உருவாகி வந்துகொண்டிருந்த வணிகக்கேளிக்கை வாசிப்புக்கு எதிராகச் செய்த முயற்சி என்ற வகையில் சந்திரோதயம் முக்கியமானது. அதில் அவர் கேளிக்கை வாசிப்பு அம்சங்களுடன் இலக்கியத்தையும் கலந்து அளிக்க முயன்றார். அம்முயற்சி வெற்றிபெறவில்லை. மு.அருணாசலம் நவீன இலக்கியம் பற்றிச் சொன்ன கருத்துக்களுக்கு க.நா.சுப்ரமணியம் அளித்த எதிர்வினைகள், மற்றும் விவாதங்கள் இவ்விதழில் முக்கியமானவை

உசாத்துணை

✅Finalised Page