under review

சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி

From Tamil Wiki
Revision as of 14:40, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

To read the article in English: Chandhravathana Allathu Kathalin Vetri. ‎

சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி (1936) எச்.நெல்லையா எழுதிய நாவல். மகாராஷ்டிர அரசப்பின்னணியில் அமைந்த சரித்திர பொழுதுபோக்கு நாவல். பின்னாளில் வெளிவந்த ஏராளமான சரித்திர நாவல்களுக்கு இது முன்னுதாரணமாக ஆகியது.

எழுத்து, பிரசுரம்

எச்.நெல்லையா வட்டிக்கடை எழுத்தராக இருந்தார் 1930-ல் கொழும்பு நகரிலிருந்து வீரகேசரி என்னும் இதழ் தொடங்கப்பட்டபோது அவர் அதில் ஆசிரியரானார். அவ்விதழில் அவர் வரலாற்றை பகைப்புலமாகக்கொண்டு தொடர்கதைகளை எழுதினார். அவற்றில் ஒன்று சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி.ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல் இது. பின்னாளில் எழுதப்பட்ட நீண்ட சரித்திர மிகைபுனைவுகளுக்கு இது வழிகாட்டியாக அமைந்தது. இந்நாவல் மிகப்பெரிய வாசக வரவேற்பைப் பெற்றது பிப்ரவரி 26, 1933-ல் வீரகேசரியில் இந்நாவல் தொடராக வெளியிடப்பட்டது. 1934-ல் கொழும்பு சரஸ்வதி புத்தகநிலையத்தாரால் நூல்வடிவில் வெளியிடப்பட்டது. இருபாகங்களில் முதல் பாகத்தில் 20 அத்தியாயங்களும் இரண்டாம் பாகத்தில் 17 அத்தியாயங்களும் கொண்டிருந்தது.

கதைச்சுருக்கம்

மகாராஷ்டிர அரசகுடும்பத்தைச் சேர்ந்த சந்திரவதனாவை ராகுலன் என்னும் இளவரசன் காதலிக்கிறான். மகாரஷ்டிர அரசுகளின் உட்பூசல்களால் அவர்களின் காதலுக்கு தடைகள் அமைகின்றன. காதல் கடைசியில் வெற்றிபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page