சந்திரசேகரம் ராசதுரை

From Tamil Wiki
Revision as of 17:50, 22 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "சந்திரசேகரம் ராசதுரை (ஏப்ரல் 12, 1916) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை பருத்தித்துறையில் மாதனை கிராமத்தில் சந்திரசேகரத்திற்கு மகனாக ஏப்ரல் 12, 1916இல் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சந்திரசேகரம் ராசதுரை (ஏப்ரல் 12, 1916) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை பருத்தித்துறையில் மாதனை கிராமத்தில் சந்திரசேகரத்திற்கு மகனாக ஏப்ரல் 12, 1916இல் பிறந்தார். பள்ளிக்கல்வியை மாதனை மெ.மி.த.க பாடசாலையில் கற்றார். சங்கீதம், நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். 1952களில் மதுரை சோமசுந்தரத்திடம் சங்கீதம் கற்றார்.

கலை வாழ்க்கை

1932இலிருந்து நாடகங்கள் நடித்தார். கர்நாடக சங்கீதத்தில் தவில் வித்துவானாக சந்திரசேகரம் ராசதுரை இருந்தார். ஸ்ரீவல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இசைக்கச்சேரி நடத்தினார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு தாபனத்தில் 1946இல் 45 நிமிடங்கள் இசைக்கச்சேரி நிகழ்த்தினார்.

சீடர்கள்

விருதுகள்

அரங்கேற்றிய கூத்துகள்

உசாத்துணை