under review

சங்கராசாரியர்

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சங்கராசாரியர் (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். உடலறி விளக்கம் நூலை மொழிபெயர்ப்பு செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சங்கராசாரியர் கும்பகோணத்தில் பொ.யு. 12-ம் நூற்றாண்டில் பிறந்தார். மத்துவ பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். கோவிந்த யோகிகள் இவரின் ஆசிரியர். இலக்கணம், இலக்கியம் ஜோதிடம் ஆகியவற்றைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சங்கராசாரியர் நீலகண்ட சிவாச்சாரியரோடு தருக்கித் தோற்றார் என்பர். இவர் 'சிவானந்தலஹரி' என்னும் நூலை எழுதினார் என்று சதாசிவம்பிள்ளை பாவலர் சரித்திர தீபகத்தில் குறிப்பிடுகிறார். சிவானந்தலஹரி ஆதி சங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. அநேக உபநிடதங்களுக்கு வியாக்கியானம் செய்தார். 'உடலறி விளக்கம்' என்னும் நூலை சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்தார். 'நாதாந்த விளக்கம்' என்னும் நூலை எழுதினார்.

பாடல் நடை

  • உடலறி விளக்கம்

திக்குமறை புகழுமனு சாத்தி ரங்கள்
சிறந்தசிதம் பரமேவு ஞான தேசி
பக்கமிரு புறமுமா ணாக்கர் குழப்
பன்னிரண்டு சமயத்துப் பல்லோர் வந்து
தக்கமிகுங் கனகசபை யருளு டையான்
சங்கரா சாரியிரு பாதம் போற்றி
மிக்ககுரு பரனேயம் பூத மென்று
விளம்புவ்தை யடியார்க்கு விதிக்க வென்றார்

நூல் பட்டியல்

  • சிவானந்தலகரி
  • உடலறி விளக்கம்
  • நாதாந்த விளக்கம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page