சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 21:42, 30 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|சங்கரலிங்க தேசிகர் சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ( ) சூரியனார் கோயில் ஆதீன மடத்தின்  27 ஆவது சந்நிதானமாக அருளாட்சி புரிந்தவர். == சூரியனார் கோ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சங்கரலிங்க தேசிகர்

சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ( ) சூரியனார் கோயில் ஆதீன மடத்தின்  27 ஆவது சந்நிதானமாக அருளாட்சி புரிந்தவர்.

சூரியனார் கோயில் ஆதீனம்

சூரியனார் கோயில் ஆதீனம் தமிழகத்தின் இரண்டு சைவ குருபரம்படைகளில் ஒன்று. சிவாக்கிர யோகிகள் பரம்பரை எம அழைக்கப்படுகிறது. சிவாக்ர யோகிகள் என அறியப்படும் சிவக்கொழுந்து சிவாச்சாரியார்ரால் நிறுவப்பட்டது.

பிறப்பு, கல்வி

சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடங்குளம் கிராமத்தில் 1920ல் பிறந்தார்.  இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனமடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகள் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித்தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சிறப்பாக சேவை புரிந்தார். அதன்பின், திருவாவடுதுறை 23 வது சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசார்யா சுவாமிகளிடம் மந்திர கஷாயம் பெற்று சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆதீனப்பொறுப்பு

முந்தைய ஆதீனகர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி 1987ல் 27 வது  பட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதீனகர்த்தராக அருளாட்சி செய்து வந்தார். சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு  தமது அருள் ஆட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மட்டத்தில் மேற்கொண்டார் பழமையான கோவில்களை புதுப்பித்து திருப்பணி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

மறைவு

102 வயது முதிர்வு காரணமாக 3 ஜனவரி 2022 காலை 11 மணி அளவில் சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்.

உசாத்துணை

சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் காலமானார்…