க. நவரத்தினம்

From Tamil Wiki
Revision as of 17:30, 28 November 2022 by Ramya (talk | contribs)

க. நவரத்தினம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

க. நவரத்தினம் இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில் 38 ஆண்டுகள் வரை ஆசிரியராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

க. நவரத்தினம் 'கலாநிலையம்’ என்னும் இலக்கிய வளர்ச்சி நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவி ’ஞாயிறு’ என்னும் செந்தமிழ்த் மாத வெளியீட்டைச் செய்தார். இப்பணிகளுக்கு சுவாமி உருத்திர கோடீசுவரர் உதவி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

க. நவரத்தினம் ’தென்னிந்திய சிற்ப வடிவங்கள்’, ’இலங்கையிற் கலைவளர்ச்சி’ ஆகிய தமிழ் நூல்களை படங்களுடன் வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • தென்னிந்திய சிற்ப வடிவங்கள்
  • இலங்கையிற் கலைவளர்ச்சி

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை