க.நா.சுப்ரமணியம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with " == உசாத்துணை == * [https://solvanam.com/2012/10/04/%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/ சொல்வனம்- க.நா.சு சிறப்பிதழ்] * [https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3...")
 
No edit summary
Line 1: Line 1:
க.நா.சுப்ரமணியம் (கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் ( 31 ஜனவரி 1912 --18 ஜனவரி 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான சிந்தனைப்போக்கு க.நா.சுப்ரமணியம் மரபு எனப்படுகிறது.

== உசாத்துணை ==
ஐரோப்பிய நவீனத்துவம் மீது ஈடுபாடும் பயிற்சியும் கொண்டிருந்த க.நா.சுப்ரமணியம் தமிழில் சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற்றில் நவீனத்துவ அழகியலை கொண்டுவர வாழ்நாளெல்லாம் முயன்றவர். முன்னோடியான நாவல்களை எழுதினார். இலக்கியத்திற்காக வணிக இதழ்களையும் பின்னர் சிற்றிதழ்களையும் நடத்தினார். இலக்கியப் பரிந்துரைகள், பட்டியல்கள் வழியாக ரசனை சார்ந்து இலக்கியப்படைப்புகளை அடையாளம் காட்டினார்.  தமிழ் இலக்கிய உலகம் கவனிக்கவேண்டிய படைப்புகளை மொழியாக்கம் செய்தார். புதுக்கவிதையின் அழகியல் வடிவத்தை அறிமுகம் செய்தார். தமிழில் ஓர் தனிமனித இயக்கம் போலவே செயல்பட்டார்.

க.நா.சுப்ரமணியத்தின் அழகியல் மரபை தொடர்பவர்கள் என சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் என ஒரு தலைமுறையும் ராஜமார்த்தாண்டன், எம்.வேதசகாயகுமார் என அடுத்த தலைமுறையும் ஜெயமோகன், க.மோகனரங்கன், லக்ஷ்மி மணிவண்ணன் என மூன்றாம் தலைமுறையும், சுனில் கிருஷ்ணன், விஷால்ராஜா என நான்காம் தலைமுறையும் அழகியல் விமர்சகர்கள் தமிழில் செயல்படுகின்றனர். தமிழில் கிட்டத்தட்ட நூறாண்டுகளாக நீடிக்கும் ஓர் இலக்கிய இயக்கம் என க.நா.சுப்ரமணியத்தின் அழகியல் பார்வையை குறிப்பிடமுடியும்.
உசாத்துணை
* [https://solvanam.com/2012/10/04/%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/ சொல்வனம்- க.நா.சு சிறப்பிதழ்]

* [https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/ க.நா.சு-ஆட்கொல்லி நாவல் முன்னுரை/]

* https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8207&cat=21

* [https://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/sep/13/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.-1912-%E2%80%93-1988-1184761.html க.நா.சு- தினமணி]

Revision as of 21:04, 16 February 2022