க.தா.செல்வராசகோபால்

From Tamil Wiki

ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால், 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010)) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். ஆசிரியர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர்.

பிறப்பு,கல்வி

செல்வராசகோபால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிப்பாளையத்தில் டிசம்பர் 13,1938 அன்று சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்தார். தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.

தொடக்கக்கல்வியைக் குருக்கள்மடம் மெதடிசுத மிசன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும்,மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும்,குடந்தையிலும்(தமிழகம்) பயின்றார். ஓவியம். தட்டச்சு, சுருக்கெழுத்து, அச்சுக்கலை. ஓமியோ மருத்துவம் முதலானவற்றிலும் பயிற்சிபெற்றார். செல்வராசகோபாலனாரின் குடும்பம் தமிழறிவு பெற்ற குடும்பமாகும்.இவரின் பாட்டனார் புலவர் இ.வ.கணபதிப்பிள்ளை,பெரியதந்தை வரகவி சின்னவப் புலவர்,

தனி வாழ்க்கை

வியற்றிஸ் பசுபதி அம்மையாரைரை மணந்தார். இதய மனோஹர்,இதய சந்திரா இதய ஜோதி, இதய அருள், இதய ராகினி என்ற ஐந்து மக்கள். இருவரும் ஆசிரியப்பணியைத் தொடர்ந்தனர். 30 வருடம் ஆசிரியப் பணி செய்து 1098ல் இனக் கலவரத்தின் போது கனடாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.

இலக்கியப் பணி

ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, சிறீலங்கா முதலான ஏடுகளில் எழுதி,கதை,கட்டுரைகள்,தொடர்கள் எழுதியிருக்கிறார். தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன்,கல்கி,திங்கள்,ஆனந்தவிகடன்,கலைமகள் போன்ற ஏடுகளிலும் எழுதினார்.1954 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் ஈழத்துப்பூராடனாரின் பேச்சு ஒலிபரப்பாகத்தொடங்கியது.

அவற்றுள் ரிப்ளக்சு அச்சகம், சீவா பதிப்பகம்,நிழல் என்னும் பெயரில் இதழ் நடத்தியது,தமிழ்கற்பிக்கும் பணியில் ஈடுபட்டமை, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கிளை ஏற்படுத்தியமை,இவர்தம் மகன் சார்ச் இதயராச் அவர்கள் வழியாகத் தமிழ்மகன் என்னும் திரைப்படம் உருவாக்கியமை,தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் தமிழ்நூல் வெளியிட்டமை (பெத்லேகம் கலம்பகம்)(1986) முதலியன இவர்தம் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.


கனடாவில் முதன்முதலாக அச்சியந ;திர

சாலை நிறுவி தமிழ்பதிப்புக்களை மேற்கொண்டதுடன்  “நிழல்” என்னும் வாரமலரையும்

கனடாவில் முதலில் வெளியிட்டவர். தமிழ் எழுத்துக்களை கணணியில் வடிவமைப்பதிலும்

தமிழ்மொழிக்கல்வியை இலவசமாக  தமிழ்மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதிலும்  தன்

மனைவி திருமதி பசுபதி செல்வராசகோபாலுடன் இணைந்து பணியாற்றிய ஒ

படைப்புகள்

நாடகங்கள்

  • கூத்தர் வெண்பா,
  • கூத்தர் விருத்தம்,
  • கூத்தர் குறள்,
  • கூத்தர் அகவல்,
  • கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு,
  • கூத்துக்கலைத் திரவியம்,
  • வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும்,
  • கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன்,
  • தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும்,
  • கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை,
  • இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும்,
  • மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை

மொழிபெயர்ப்புகள்

கிரேக்கத்தின் ஆதி கவிஞரான ஹோமரின் இலியட், ஒடிசி (Iliad,Odyssey)காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார். ஒடிசி மொடிபெயர்ப்பு 8355 அடிகள் (2098 செய்யுள்கள்) கொண்டது.மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 2089 (8355 பாடலடிகள்)

ஈழத்துப் பூராடனார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். 11100 பாடல்வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுளது.

ஆய்வு நூல்கள்

  • ஐங்குறுநூற்று அரங்கம்,
  • சூளாமணித் தெளிவு,
  • கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்,
  • நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம்,
  • சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்,
  • பெருங்கதை ஆய்வுநோக்கு,
  • வல்வெட்டித்துறைக் கடலோடிகள்