being created

கௌதம நீலாம்பரன்

From Tamil Wiki
Revision as of 23:38, 5 August 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கௌதம நீலாம்பரன்

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர் என தமிழ் இலக்கியப் பரப்பில் பல களங்களில் செயல்பட்டவர் கௌதம நீலாம்பரன். (கைலாசநாதன்; பிறப்பு: ஜூன் 14, 1948; இறப்பு: செப்டம்பர் 14, 2015) பொது வாசிப்புக்குரிய நாவல்கள் பலவற்றை எழுதியவர். வரலாற்று நாவல்களை அதிகம் எழுதியிருக்கிறார். தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கௌதம நீலாம்பரன், ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் என்ற கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். அவ்வூரில் பள்ளிக் கல்வி பயின்றார். நாடக ஆர்வத்தால் வீட்டிலிருந்து வெளியேறி,  நவாப் ராஜமாணிக்க நாடகக் குழுவில் இணைந்தார். அங்கு சில வேடங்களில் நடித்து நடிப்புப் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

கௌதம நீலாம்பரன், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 1965-ல், சென்னைக்கு வந்தார். நடிக்க வாய்ப்புகள் அமையாததால் ஹோட்டல் சப்ளையர், பழங்கள் விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று பல தொழில்களை மேற்கொண்டார். நண்பர்களின் அறைகளில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார். நாளடைவில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.